கட்டாயத்தின் பேரில் டப்பிங் பணிகளுக்காக சென்னை சென்றேன், ஆனால் - கர்ணன் படத்தில் சொந்த குரலில் பேசாதது குறித்து லால்.

By Rajkumar · 17/5/2021

'பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது.

இந்த படத்தில் தனுஷ்ஷை தவிற இந்த படத்தில் நடித்த லால், நட்டி நடராஜன், யோகி பாபு என்று அனைவரும் தனுஷுக்கு இனியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். அதிலும், இந்த படத்தில் தனுஷுக்கு பின்னர் பலராலும் பாராட்டப்பட்டது 'எமராஜா' கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் லாலின் நடிப்பு தான். மலையாள நடிகரான இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழில் சண்டக்கோழி, ஓரம் போ, காளை, குட்டி புலி, சீமராஜா என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : கொரோனாவால் இறந்த மனைவியை கடைசியாக பார்க்கக்கூட முடியாமல் மருத்துவமனையில் அருண் ராஜா - காரணம் என்ன தெரியுமா ?

கர்ணன் படம் வெளியான சில வாரங்களுக்கு முன்னர் தான் கார்த்தியின் சுல்தான் படம் கூட வெளியானது. அந்த படத்திலும் நடிகர் லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படத்தை விட கர்ணன் படத்தில் தான் லாலின் நடிப்பும் சரி, அவரது டப்பிங்கும் சரி, மிகவும் பாராட்டுக்குரிய வகையில் இருந்தது. இப்படி ஒரு நிலையில் கர்ணன் படத்தில் தனது சொந்த குரலில் பேசாதது ஏன் என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் நடிகர் லால்.

https://twitter.com/LalDirector/status/1393918518563794947

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், ‘கர்ணன்’ படத்தில் ஏமராஜா பாத்திரத்துக்கு ஏன் சொந்தக் குரலைப் பயன்படுத்தவில்லை என்று பலரும் என்னிடம் கேட்டு வருகிறீர்கள். ‘கர்ணன்’ படம் திருநெல்வேலி பின்னணியைக் கொண்ட திரைப்படம் என்பதை நீங்கள் அறிவீர்கள். திருநெல்வேலியின் தமிழ் என்பது சென்னையில் பேசப்படும் தமிழ் மொழியைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமானது.  ‘கர்ணன்’ மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியவத்துவம் உள்ள ஒரு திரைப்படம். மேலும் தனித்துவமான அந்த வட்டார மொழியைப் பேசுவதன் மூலமே அந்தக் கதாபாத்திரம் முழுமை பெறும். அதில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் உள்ளூர்க்காரர்கள்.

எனவே என்னுடைய மொழி மட்டும் படத்தில் தனியாகத் தெரிவதற்கு வாய்ப்பு இருந்தது. படத்தில் என்னுடைய பங்களிப்பு 100% இருக்கவேண்டும் என்று நான் விரும்பியதால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோரது கட்டாயத்தின் பேரில் டப்பிங் பணிகளுக்காக சென்னை சென்றேன். எனினும் படத்தின் நலனுக்காக என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்க திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவரது குரல் பயன்படுத்தப்பட்டது. உங்கள் அனைவரது ஆதரவுக்கும், அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full