நிஜமாகவே நான் குதிரை தான் ஓட்டுறேன் - கர்ணன் பட வாய்ப்பு குறித்து குதிரை பையனின் முதல் பேட்டி.

By Rajkumar · 19/4/2021

'பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

https://www.youtube.com/watch?v=UE8b2MEuxPw&feature=youtu.be

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது 'கர்ணன்' இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.

இதையும் பாருங்க : சிரியலில் தான் குழந்தை இல்ல ஆனா, நிஜத்தில் தனத்திற்கு இவ்ளோ பெரிய மகன் இருக்காரு.

கொரோனா பிரச்சனை காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் செய்தது. இந்த படத்தில் தனுஷ்ஷை தவிற இந்த படத்தில் நடித்த லால், நட்டி நடராஜன், யோகி பாபு என்று அனைவரும் தனுஷுக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். அந்த வகையில் இந்த படத்தில் பல பிரேமில் குதிரையுடன் வந்த இந்த பையனையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

அதிலும் இவர் குதிரை மீது சாவாரி செய்யும் காட்சிகளுக்கு கிளாப்ஸ் பறந்தது என்று தான் சொல்ல வேண்டும். இவருடைய பெயர் காளி. 8 ஆம் வகுப்பு வரை பயின்ற இவர் அதன் பின்னர் குதிரை சவாரியை கற்றுக்கொண்டு உள்ளார். மேலும், சில சிறுவர்களுக்கு தற்போது குதிரை சவாரி கற்றுக்கொடுத்து வருகிறாராம். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full