கண்டா வரச் சொல்லுங்க பாடல் இந்த ஐயப்பன் பாடலின் காப்பியா ? அதான் படக்குழுவே ஓத்துக்கிட்டு இருக்காங்களே.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல திறமையை காண்பித்து வருகிறார். கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை ஆடியது. தற்போது ஜாகமே தந்திரம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் என்று படு பிசியாக நடித்து வரும் தனுஷ், பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார்.
https://twitter.com/iamSri_Sri/status/1362792375425265666
இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது தனுஷின் 41 வது படமாகும். இவர்களுடன் யோகி பாபு. மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.
அதே போல இந்த படம் 1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை சார்பில் போலீசில் மனு அளிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இருந்து 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற பாடல் வெளியாகி இருந்தது.
https://twitter.com/ravir1971/status/1362947150032723969
கண்டா வர சொல்லுங்க மணிகண்டனை கையோடு கூட்டி வாருங்க என்ற ஐயப்பன் பாடலை போல இருக்கிறது என்று நெடிசங்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே தர்பார் படத்தில் அனிருத் இசையமைத்த ''நான் தாண்டா இனிமேல்" பாடல் ஐயப்பன் பாடலில் இருந்து சுட்டது என்று பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதுகுறித்து அனிருத் எதுவும் பேச வில்லை. ஆனால், கர்ணன் படத்தின் இந்த பாடல் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய ஐயப்பன் பாடலின் இன்ஸ்போரேஷன் தான் என்பதை உறுதிபடுத்தும் விதமாக இந்த பாடலின் ஆரம்பத்திலேயே தேக்கம்பட்டி s சுந்தர்ராஜனுக்கு நன்றியை தெரிவித்து தான் ஆரம்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/Virat_Vfc_/status/1362798300131332097
இந்தப் பாடலை அழகிய நாட்டுப்புறகுரலில் பாடிய மாரியம்மாள் யார் என்பது பலரும் அறிந்திராத விஷயம். இவர் ஆரம்பத்தில் ஊர் திருவிழாக்களில் பாட ஆரம்பித்த இவர் சாவு வீடுகளில் இவரது பாடல்களுக்கு ஆரம்ப காலத்தில் அங்கீகாரம் கிடைத்தது என்று கூறியிருக்கிறார் ஊராகச் சென்று ஒப்பாரி பாடிக் கொண்டிருந்த இவர் அதன்பின்னர் கரகாட்டம் ஆட துவங்கி இருக்கிறார். மேலும், இவர் கம்யூனிஸ்ட் மேடைகளில் கூட பாடியிருக்கிறாராம்.மேலும் இவர் வெடிகுண்டு முருகேசன், மாதவனும் மலர்விழியும், மதுரைசம்பவம், களவாணி 2 ஆகிய படங்களில் இதற்கு முன்னர் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.