கர்ணன் படத்தில் பரியேறும் பெருமாளை நோட் பண்ணீங்களா ? அட, உண்ம தாங்க. இதோ புகைப்படம்.

By Rajkumar · 4/5/2021

'பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய தனுஷ் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது 'கர்ணன்' இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டி இருந்தார்.

கொரோனா பிரச்சனை காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் தலை இல்லாத புத்தர் சிலை, கழுதை, முகமூடி அணிந்த பெண் என்று பல குறியீடுகளை வைத்து இருந்தார் மாரி செல்வராஜ்.அதே போல கர்ணன் படத்தில் வந்த கர்ணனுகும் பரியேறி ஏறும் பெருமாளின் வந்த பரியனுக்கும் பல தொடர்புகளை ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் 'பரியேறும் பெருமாள்' ரெபரென்ஸை கர்ணன் படத்திலும் பயன்படுத்தி உள்ளார். கர்ணன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மறைந்த ஊர் பெரியவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும். அதில் உள்ள ஒரு பெரியவரின் பெயர் பரியேறும் பெருமாள் என உள்ளது.  இதனை கண்ட ரசிகர்கள் தற்போது அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

behindtalkies AMP · Quick view
View full