கர்ணன் படத்தை தொடர்ந்து மீண்டும் இணைந்த தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி. தனுஷ் வெளியிட்ட அறிவிப்பு.

By Rajkumar · 23/4/2021

கர்ணன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இதுகுறித்து நடிகர் தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் நேற்று (ஏப்ரல் 9) வெளியாகியது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது.

https://twitter.com/dhanushkraja/status/1385434826954600450

மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

இதையும் பாருங்க : ஏலே பேதில போவான், பெரிய மனுஷன்னு பாக்கேன் - கர்ணன் படத்தை விமர்சித்த மாறனை வெளுத்து வாங்கிய ஜி பி முத்து.

இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது 'கர்ணன்' இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார். சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு அசுரன் படத்திற்காக தேசிய விருதும் வழங்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்தின் மூலம் இணைந்துள்ளது மாரி செல்வராஜ் - தனுஷ் இணை.

https://twitter.com/mari_selvaraj/status/1385437783276232707

இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டில்‘ கர்ணனின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நான் மாரிசெல்வராஜுடன் இணைந்து பணியாற்றப் போகிறேன். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்குகிறது’ என்று அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள மாரி செல்வாராஜ், என் கர்ணனுக்கு நன்றியும் ப்ரியமும் எப்போதும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full