'நம்ம கடந்து வந்த காலம் பொற்காலம்'- வெளியானது 'மெய்யழகன்' படத்தின் ட்ரெய்லர்

By Rajkumar · 23/9/2024

'மெய்யழகன்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்திக். இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. ஆனால், கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான 'ஜப்பான்' திரைப்படம் படும் தோல்வி அடைந்தது. ஜப்பான் திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கார்த்தி நடிப்பில் இயக்குனர் பிரேம்குமாரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் 'மெய்யழகன்'. பிரேம்குமார் விஜய் சேதுபதி- திரிஷா நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த '96' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மெய்யழகன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மெய்யழகன் படம் :

மேலும், இந்தத் திரைப்படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கோவை கொடிசியா ஹாலில் நடைபெற்றது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா தான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது.

https://www.youtube.com/watch?v=u4aYxxDIZrA

மெய்யழகன் ட்ரெய்லர்:

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. ஒரு திருமணத்திற்காக கிராமத்திற்கு வரும் அரவிந்த்சாமி கார்த்தியை சந்திக்கும் நிகழ்வுகளும் அவர்களுக்கு இடையே இருக்கும் உறவு தான் படத்தின் கதை. சாதாரணமான கிராமத்து கதை அம்சமாக இருந்தாலும் ட்ரெய்லர் பார்ப்பதற்கு மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது. அதேசமயம் இந்த ட்ரெய்லர் படம் பார்க்கும் ஆவலையும் தூண்டி இருக்கிறது.

மெய் மறக்க வைக்கிறது:

அதிலும் அரவிந்த்சாமியை அத்தான் என அழைத்து உருகும் கார்த்தி இயல்பான வெகுளித்தனத்தால் கவர்கிறார். அதேபோல், அவருடைய பாசத்திற்கு கட்டுப்பட்டு மெய் மறந்து நிற்கும் அரவிந்த்சாமியின் கதாபாத்திரமும் நமக்கு ரொம்பவும் புதுசாக இருக்கிறது. இருவரும் கலகலப்பாக பேசிக் கொள்வது, தண்ணி அடிப்பது, மைக்கேல் ஜாக்சன் டான்ஸ் என ட்ரெய்லர் கலை கட்டுகிறது. அதேபோல் உலக நாயகனின் குரலில் 'யாரோ இவன் யாரோ' என பின்னணியில் ஒலிக்கும் பாடலும் நம்மை ஈர்க்கிறது.

https://www.youtube.com/watch?v=Ahp840_aCoI&t=3s

நெட்டிசன்களின் கருத்து:

மேலும், நம்ம கடந்து வந்த காலம் பொற்காலம் என கார்த்தி சொல்லுவதும் ஜல்லிக்கட்டு காளை சீறிப்பாய்வதும் என டிரைலர் முடிகிறது. 96 போன்ற அழுத்தமான கதையை கொடுத்த பிரேம் குமாருக்கு 'மெய்யழகன்' வெற்றி தான் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு வெட்டு, குத்து, ரத்தம், கத்தி என்று எதுவும் இல்லாமல், மிகவும் யதார்த்தமாக இப்படம் அமைந்திருப்பதால், இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full