ஒரு அண்ணன் இருப்பதால் நான் ரொம்ப லக்கி, ஏன்னா - 'ஓ எந்தன் பேபி' பட விழாவில் கார்த்தி பகிர்ந்த விஷயம்

By subhashini · 28/6/2025

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பலேபாண்டியா, குள்ளநரிக்கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

மேலும், சமீப காலமாக விஷ்ணு விஷால் அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி மற்றும் FIR ஆகிய படங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இது மட்டுமில்லாமல் இன்னும் சில படங்களில் விஷ்ணு கமிட் ஆகியிருக்கிறார். அதில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மோகன்தாஸ்.

விஷ்ணு விஷால் திரைப்பயணம்:

அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகன் ஆரியன் பெயரிலும் ஒரு படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இடம் பொருள் ஏவல் என்ற படத்திலும் விஷ்ணு நடித்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, தற்போது நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா, நடிப்பில் உருவாகி இருக்கப்படும் ஓ எந்தன் பேபி. இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். இந்த படத்தை நடிகர் கிருஷ்ணா தான் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருந்தது.

ஓ எந்தன் பேபி:

இதில் படக்குழுவினருடன் நடிகர் கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன் உட்பட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, நமக்கு ஒரு அண்ணன் இருப்பது எப்போதுமே ஸ்பெஷலான விஷயம்தான். அந்த வகையில் நான் ரொம்ப லக்கி. நான் சினிமாவுக்குள் வரும்போது தமிழ் துறையே சேர்ந்து என்னை வரவேற்றது. நிறைய பேர் வீட்டிற்கு வந்து வாழ்த்தி அன்பு கொடுத்து இருந்தார்கள். சினிமாவுக்கு புதிதாக வருபவர்களுக்கு அந்த அன்பை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

விழாவில் கார்த்தி பேசியது:

அந்த வகையில் ருத்ராவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவர் இதற்கு முன்பு உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் பார்க்கும் போதே ஒரு ஜாலியான படமாக இருக்கும் என்று தெரிகிறது. மக்கள் இன்று தியேட்டருக்கு வந்து ஜாலியான படங்கள் பார்க்க விரும்புகிறார்கள். நல்ல நேரத்தை செலவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். வெற்றிமாறன் சார் எல்லோரையும் சீரியஸ் ஆகிவிட்டார். அது இன்ஸ்பயர் ஆகி எல்லோரும் சீரியஸான படங்கள் பண்ணுகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=TfCh8F8t1Xo

படம் பற்றி சொன்னது:

இந்த படத்தினுடைய டீசர் பிரஷ்ஷாக இருந்தது. படத்தின் இயக்குனர் யார் என்று கேட்டேன். அப்போதுதான் இந்த படத்தை எடுத்தது கிருஷ்ணா என்று சொன்னார்கள். நான் உதவி இயக்குனராக இருக்கும்போது கிருஷ்ணா நடிகராக இருந்தார். வாழ்க்கையில் நாம் எந்த விஷயத்தை பண்ணினாலும் அதை விரும்பி பண்ண வேண்டும். நமக்கு தேவையான விஷயத்துக்காக நாம் உழைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயமாக நமக்கான பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full