தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா.அதனைத் தொடர்ந்து இவர் கொம்பன், மருது, தேவராட்டம், புலிகுத்தி பாண்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் முத்தையா இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும். அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது.

இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி சங்கர் நடிக்கிறார். பொதுவாக கார்த்தி ஏற்கனவே பணியாற்றிய இயக்குனர்களுடன் பணியாற்றிபதில்லை. இந்த படத்தின் மூலம் முதன் முறையாக தன் முந்தய இயக்குனருடன் கைகோர்த்துள்ளார் கார்த்தி.

Advertisement

படத்தின் கதை :

படத்தில் ஊர் தாசில்தாராக இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு நான்கு மகன்கள் இருக்கின்றன. அதில், கடைசி மகன் தான் கார்த்தி. மேலும், கார்த்தியின் தாயாராக சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கிறார். தனது தந்தையை விட தாய் மீது தான் அதிகம் பாசம் வைத்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் சரண்யா பொன்வண்ணன் இறந்துவிடுகிறார். தன்னுடைய தாயார் சரண்யா பொன்வானனின் இறப்பிற்கு பிரகாஷ்ராஜ் காரணமாக இருப்பதால் அவரை கொள்ள வேண்டும் என்று கோபத்துடன் இருக்கிறார் கார்த்தி.

இதனால் இவர்கள் குடும்பத்திலேயே பல பிரச்சனைகள் வெடிக்கின்றது. கார்த்தியின் செயல்களால் கோபமடையும் பிரகாஷ்ராஜ் கார்த்தியை ஏமாற்றி அவரது தாயார் சரண்யா பொன்வண்ணன் பெயரில் இருக்கும் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்கிறார். இப்படியே சென்று கொண்டிருக்க சரண்யா பொன்வண்ணனின் இறப்பிற்கு என்ன காரணம் ? தன்னுடைய தந்தை பிரகாஷ்ராஜை கார்த்தி கொலை செய்தாரா இல்லை குடும்பத்துடன் மீண்டும் இணைந்தாரா என்பதே படத்தின் மீதி கதை.

Advertisement

நிறைகள் :

படத்தில் நடித்திருக்கும் அனைவருமே தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கார்த்தி ஆக்சன், காமெடி,, நடனம் , நக்கல், நையாண்டி என்று அனைத்திலும் புகுந்து விளையாடி இருக்கிறார்.

Advertisement

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கும் ஷங்கரின் மகள் அதிதி முதல் படம் போல இல்லாமல் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடல்,, நடனம். சென்டிமென்ட் காட்சிகள் என்று அனைத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை இந்த படத்திலும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவரைவிட ராஜ்கிரணின் கதாபாத்திரம் ரசிகர்களை நிச்சயம் கவரும். காமெடியனாக வந்திருக்கும் சூரி இந்த படத்தில் சிரிக்க வைத்திருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை கிராமத்து படத்திற்கு ஏற்றார் போல மிக கச்சிதமாக புரிந்து இருக்கிறது. தந்தை பிரகாஷ் ராஜ் மற்றும் வில்லன் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருடன் மோதும் காட்சியில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

குறைகள் :

முத்தையா இயக்கிய முந்தைய படங்களை போலவே இந்த படத்திலும் அம்மா சென்டிமென்ட், குடும்பத் தகராறு, பழிக்குப் பழி என்ற அதே பாணி கொஞ்சம் சலிப்படைய செய்திருக்கிறது.

படத்தின் கதையும், திரைக்கதையும் அனைவரையும் திருப்திப்படுத்தாது.

பேமிலி ஆடியன்ஸை பூர்த்தி செய்தாலும் அணைத்து தரப்பு ரசிகர்களையும் பூரித்தி செய்யும் அளவிற்கும் படத்தில் சரக்கு கம்மி தான்.

படத்தின் இறுதி அலசல் :

பொதுவாக முத்தையாவின் படங்களில் தாய் பாசம் குடும்பச் சண்டை பழிவாங்கல் போன்ற பல விஷயங்கள் இடம் பெற்று இருக்கும் இந்தப் படத்திலும் அதே பாணியை தொடர்ந்து இருக்கிறார் முத்தையா இருப்பினும் இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஓரளவுக்கு பூர்த்தி செய்யும் விதமாக இருந்தாலும் ஒரு சிலர் இது Cringeனு சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. மொத்தத்தில் விருமன் ‘வீரமானவன்’.

Advertisement