சாமுண்டீஸ்வரியை பழிவாங்க கார்த்திக்கை நாடும் சிவனாண்டி, என்ன செய்யப் போகிறார் கார்த்திக்- விறுவிறுப்பில் கார்த்திகை தீபம் 2

By krithika · 16/11/2024

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் 'கார்த்திகை தீபம்' ஒன்று. சமீபத்தில் தான் இதன் முதல் பாகம் முடிந்த நிலையில், தற்போது புதிய கதை களத்துடன் கார்த்திகை தீபம் சீரியல் இரண்டாவது பாகம் தொடங்கியிருக்கிறது. இந்த வாரம் கார்த்திக் தன் தாத்தாவிடம், தன் அத்தை மற்றும் மாமா குறித்து அனைத்தையும் கேட்டு தெரிந்து கொள்கிறார். பின், தன் அத்தையை பார்க்க வேண்டும் என்று கார்த்திக் செல்ல, போன இடத்தில் கார்த்திக் ஒருவருக்கு உதவி செய்ய, பதிலுக்கு அவர் நண்பன் ஆகி கார்த்திக் தங்குவதற்கு வீடு வாடகைக்கு பிடித்துக் கொடுக்கிறார்.

இதையடுத்து இருவரும் சேர்ந்து அந்த ஊரில் நடக்கும் திருவிழாக்கு செல்கின்றனர். அங்கு சாமுண்டீஸ்வரி, தன் தரப்பில் சிலம்பாட்டம் போட்டியில் பங்கேற்க யாரும் இல்லை என்பதால் தனக்காக போட்டியில் கலந்து கொள்பவருக்கு 15 பவுன் செயினை பரிசாக தருகிறேன் என்று அறிவிக்கிறார். இதுதான் சரியான நேரம் என கார்த்திக் போட்டியாளராக களத்தில் இறங்கி சிவனாண்டியை ஓட விடுகிறார். பின், சாமுண்டேஸ்வரி கார்த்திக்குக்கு பரிசை கொடுக்க, கார்த்திக் அதை நிராகரிக்கிறார். அதோடு, நீங்க யாரும் ஆம்பளை இல்லையா என்று நீங்கள் கேட்டதால் தான் கலந்து கொண்டேன் என்று சாமுண்டீஸ்வரிக்கு பதிலடி கொடுக்கிறார்.

கார்த்திகை தீபம் 2:

பின் நேற்று எபிசோடில், சாமுண்டீஸ்வரியின் முதல் மகள் காட்டப்படுகிறார். அவரை மயில்வாகனம் என்பவர் பின் தொடர்ந்து வந்து கையைப் பிடித்து இழுக்க, அங்கிருந்தோர் மயில்வாகனத்தை அடிக்க சென்றனர். அப்போது சாமுண்டீஸ்வரியின் மகள் அது என் கணவர் என்று தடுத்து நிறுத்துகிறார். இன்னொரு பக்கம், சாமுண்டீஸ்வரியின் கடைசி மகள் ஸ்வேதா திருவிழாவில் பாட்டு பாட, ஸ்வேதா பாடினால் சாமுண்டீஸ்வரிக்கு பிடிக்காது என ராஜராஜன் தடுக்க ஓட, அந்த குரலை கேட்டு சாமுண்டீஸ்வரியும் ஓடி வருகிறார்.

நேற்றைய எபிசோடிடு:

பின், எப்படியோ மயில்வாகனம் ஸ்வேதா பாடுவதை மறைத்து விடுகிறார். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை தனக்கு கீழே வேலை செய்ய வைக்க வேண்டும் என்று சொல்ல, கார்த்திக் இடம் இது குறித்து சந்திரகலா பேசுகிறார்‌. ஆனால், கார்த்திக் திமிர் பிடிச்ச சாமுண்டீஸ்வரி கிட்ட வேலை பார்க்க முடியாது என பதிலடி கொடுக்கிறார். கடைசியில் சந்திரகலா சாமுண்டீஸ்வரி எதிரி சிவனாண்டியை சந்திக்கிறார். இறுதியில் சிவனாண்டி மனைவி தான் சந்திரகலா என தெரிகிறது.

இன்றைய எபிசொட்:

இன்றைய எபிசோடில், கார்த்திக் வேலைக்கு வர முடியாது என்று சொல்லி அனுப்பி விடுகிறார். பின் சாமுண்டீஸ்வரியின் பி ஏ, சந்திரகலா சாமுண்டீஸ்வரியின் எதிரி சிவனாண்டியை சந்திக்கிறார். இறுதியில் சிவன் ஆண்டி மனைவி தான் சந்திரகலா, சாமுண்டீஸ்வரியை வேவு பார்ப்பதற்காக தான் அவருடன் இருக்கிறார் என்று தெரிகிறது. அப்போது சந்திரகலா, சிவனாண்டியின் காலில் விழுந்து இந்த ஊரில் அவள் வைத்து தான் சட்டமாக இருக்கிறது.

சீரியல் ட்ராக்:

நீங்க எப்போதுமே இரண்டாவது இடத்தில் தான் இருக்கீங்க. அதை நினைச்சு எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. நாம் முதலிடத்தை பிடிக்க இப்போ ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்திருக்கிறது. இந்த ஊரில் கார்த்திக் என்று ஒருத்தன் வந்திருக்கிறான். அவன் சாமுண்டீஸ்வரியை அவமானப்படுத்தி விட்டான்‌‌. அதனால், கார்த்திகை சாமுண்டீஸ்வரி அடிமையாக்க வேண்டும் என்று நினைக்கிறாள். நீங்க போய் அவன்கிட்ட பேசுங்க என்று கணவனை சந்திரகலாஏத்தி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full