காதலரை மணம் முடித்த கார்த்திகை தீபம் சீரியல் நடிகை - அவரே பகிர்ந்த திருமண புகைப்படங்கள் இதோ.

By Rajkumar · 8/11/2023

கார்த்திகை தீபம் சீரியல் நடிகைக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெறவிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த அந்த வகையில் பல வருடங்களாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்தவர் கார்த்திக் ராய்.

View this post on Instagram

A post shared by Arthika (@itsme_arthika)

கார்த்திகை தீபம் சீரியல்:

இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிரேக் எடுத்துக்கொண்டார். தற்போது இவர் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற புது சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். கார்த்திகேயா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடிக்கிறார். மேலும், கதாநாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா நடிக்கிறார். இந்த சீரியலின் கதாநாயகி ஹர்த்திகா புது முகம்.ஹர்த்திகா கேரளாவை சேர்ந்தவர். கேரளத்தில் உள்ள கோட்டயத்தில் தான் இவர் பிறந்து வளர்ந்தார்.

இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரை உலகில் கால் பதித்திருக்கிறார். இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், சரியான அங்கீகாரம் இவருக்கு கிடைக்கவில்லை. திரையில் சரியான வாய்ப்புகள் அமையாததால் இவர் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது இவர் கார்த்திகை தீபம் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக திரைப்படங்களில்தான் நடிக்க தொடங்கினார்.

தமிழில் கதாநாயகியாகவும் இவர் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும், இவர் நடித்த படங்களில் ஒன்று தான் பிளாக் அண்ட் வொயிட். இந்த படத்தில் ஹர்த்திகாவுக்கு ஜோடியாக கார்த்திக் ராஜ் நடித்திருந்தார். இதை அடுத்து இவர்கள் இருவரும் ஜோடியாக கார்த்திகை தீபம் என்ற தொடரில் நடிக்கிறார்கள்.

ஹர்த்திகா திருமணம்:

அதோடு இந்த சீரியலில் ஹர்த்திகா நடிப்பதற்கு திருமதி செல்வம் நடிகை அபிதா தான் இவரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இந்த கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நடிகை ஹர்த்திகாவுக்கு திருமணமண செய்தி குடித்த தகவல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகியது. .

திருமணம் புகைப்படங்கள் :

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி அர்த்திகாவிற்கு கேரளாவில் நடைபெற்றது. தனது காதலனை கரம்பிடித்திருக்கும் அர்த்திகா அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அதில், ‘எனது வாழ்க்கையின் சிறந்த தருணங்கள்’ என்கிற கேப்ஷனையும் குறிப்பிட்டிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full