கார்த்திக்கை அடிமையாகத் துடிக்கும் சாமுண்டீஸ்வரி, கார்த்திக் கொடுத்த பதிலடி - விறுவிறுப்பில் கார்த்திகை தீபம்

By krithika · 15/11/2024

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ' கார்த்திகை தீபம்' ஒன்று. சமீபத்தில் தான் இதன் முதல் பாகம் முடிந்த நிலையில், தற்போது புதிய கதைகளத்துடன் கார்த்திகை தீபம் சீரியல் இரண்டாவது பாகம் தொடங்கியிருக்கிறது. இந்த வாரம், கார்த்திக்கின் தாத்தா ராஜசேதுபதி கோவிலை திறக்க முடியாமல் இருக்க, கார்த்திக் பூட்டை உடைத்து கோவிலை திறந்து பூஜை செய்கிறார். கார்த்திக் கோவிலை திறந்து சிவலிங்கத்தின் மீது தண்ணீரை ஊற்றியதும் மழை கொட்ட தொடங்கியது. அப்போது அங்கு இருக்கிற மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இதையடுத்து கார்த்திக், மாமாவிற்கும் நமக்கும் என்ன பிரச்சனை என்று தனது தாத்தாவிடம் கேட்க. உன் மாமா பிரச்சனை இல்லை, உன் அத்தை சாமுண்டேஸ்வரி தான் பிரச்சனை. அவளுக்கு ஆம்பளைங்க என்றாலே பிடிக்காது என்று அவரின் கதையை சொல்கிறார். அப்போது கார்த்திக், தனது தாத்தாவுக்கு ஆறுதலாக பேசுகிறார். பின், தன் அத்தையை பார்க்க வேண்டும் என்று கார்த்திக் செல்ல, அங்கு அத்தை சாமுண்டேஸ்வரிக்கு முதல் மரியாதை கொடுப்பதை பார்த்து, மாமா டம்மி பீஸ் என்பதை புரிந்து கொள்கிறார்.

கார்த்திகை தீபம்:

அதோடு போன இடத்தில் கார்த்திக் ஒருவருக்கு உதவி செய்ய, பதிலுக்கு அவர் நண்பன் ஆகி கார்த்திக் தங்குவதற்கு வீடு வாடகைக்கு பிடித்துக் கொடுக்கிறார். இதையடுத்து இருவரும் சேர்ந்து அந்த ஊரில் நடக்கும் திருவிழாக்கு செல்கின்றனர். அப்போது அந்த நண்பர், சாமுண்டீஸ்வரி குறித்து கார்த்திக்கிடம் பயங்கரமாக சொல்ல, அனைத்தையும் கார்த்திக் கேட்டுக்கொள்கிறார். பின் நேற்றைய எபிசோடில், சாமுண்டேஸ்வரி தரப்பில் சிலம்பாட்டம் போட்டியில் பங்கேற்க யாரும் இல்லை என்பதால் தனக்காக போட்டியில் கலந்து கொள்பவருக்கு 15 பவுன் செயினை பரிசாக தருகிறேன் என்று அறிவிக்கிறார்.

நேற்றைய எபிசோட்:

இதுதான் சரியான நேரம் என கார்த்திக் போட்டியாளராக களத்தில் இறங்கி சிவனாண்டியை ஓட விடுகிறார். பின், சாமுண்டேஸ்வரி கார்த்திக்குக்கு பரிசை கொடுக்க, கார்த்திக் அதை நிராகரிக்கிறார். அதோடு, நீங்க யாரும் ஆம்பளைய இல்லையா என்று நீங்கள் கேட்டதால் தான் கலந்து கொண்டேன் என்று சாமுண்டேஸ்வரிக்கு பதிலடி கொடுக்கிறார். பின், குச்சியில் செயினை வாங்கி அதை அப்படியே தூக்கி வீச அங்கிருந்த கதாநாயகி ரேவதி கழுத்தில் செயின் விழுகிறது.

இன்றைய எபிசொட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரியின் முதல் மகள் காட்டப்படுகிறார். அவரை மயில்வாகனம் என்பவர் பின் தொடர்ந்து வந்து கையைப் பிடித்து இழுக்க, அங்கிருந்தோர் மயில்வாகனத்தை அடிக்க சென்றனர். அப்போது சாமுண்டேஸ்வரியின் மகள் அது என் கணவர் என்று தடுத்து நிறுத்துகிறார். இன்னொரு பக்கம், சாமுண்டீஸ்வரியின் கடைசி மகள் ஸ்வேதா திருவிழாவில் பாட்டு பாட, ஸ்வேதா பாடினால் சாமுண்டீஸ்வரிக்கு பிடிக்காது என ராஜராஜன் தடுக்க ஓட, அந்த குரலை கேட்டு சாமுண்டேஸ்வரியும் ஓடி வருகிறார்.

சீரியல் ட்ராக் :

பின், எப்படியோ மயில்வாகனம் ஸ்வேதா பாடுவதை மறைத்து விடுகிறார். அதன் பிறகு சாமுண்டேஸ்வரி கார்த்திக்கை தனக்கு கீழே வேலை செய்ய வைக்க வேண்டும் என்று சொல்ல, கார்த்திக் இடம் இது குறித்து சந்திரகலா பேசுகிறார்‌. ஆனால், கார்த்திக் திமிர் பிடிச்ச சாமுண்டேஸ்வரி கிட்ட வேலை பார்க்க முடியாது என பதிலடி கொடுக்கிறார். கடைசியில் சந்திரகலா சாமுண்டீஸ்வரி எதிரி சிவனாண்டியை சந்திக்கிறார். இறுதியில் சிவனாண்டி மனைவி தான் சந்திரகலா என தெரிகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full