'அது சொல்வதற்கு எனக்கு எந்த கூச்சமும் கிடையாது' - சுசித்ரா குற்றச்சாட்டுக்கு கார்த்தி பதில்.

By Arun · 14/5/2024

தன்னுடைய முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று பாடகி சுசித்ரா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடகியாக திகழ்பவர் சுசித்ரா. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தவுடன் ரேடியோ மிர்ச்சியில் சேர்ந்து மீடியாவிற்குள் நுழைந்தார். அதற்குப் பிறகு இவர் பல நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=WaEEEqCAr2k&t=1105s

அந்த வகையில் ஸ்ரேயா சரண், தமன்னா, மாளவிகா போன்ற பல நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார். அதற்கு பின்பு இவர் சினிமாவில் பாடவும் ஆரம்பித்தார். பின்பு தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் பாடி இருக்கிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார். இதற்கிடையில் இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

சுசித்ரா-கார்த்திக் குமார் குறித்த தகவல்:

இவர்கள் இருவரும் 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் சில ஆண்டுகளாகவே நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், சஞ்சித் செட்டி போன்ற பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை “சுச்சி லீக்ஸ்” என்ற பெயரில் வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இது குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலும், தன் தரப்பு நியாயத்தை சுசித்ரா கூறியிருந்தார்.

பாடகி சுசித்ரா பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாடகி சுசித்ரா, என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பணத்தைக் கொடுத்து என்னை பற்றி தவறாக சித்தரித்து வருகிறார். அவரும் தனுஷும் சேர்ந்து குடித்து விட்டு ஒரு அறைக்குள் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்த அறைக்குள் அவர்கள் சென்றால் என்ன செய்வார்கள்? என்று எனக்கு தெரியும். அதேபோல் எனக்கு திருமணமாகி இரண்டு வருடத்திலேயே என்னுடைய கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரிந்தது.

கார்த்தி குறித்து சொன்னது:

இருந்தாலும் என்னுடைய தாய் தந்தைக்காக தான் நான் பொறுமையாக சேர்ந்து வாழ்ந்தேன். அதற்கு பிறகும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் விவாகரத்து பெற்றோம். பயில்வான் ரங்கநாதன் என்னை பற்றி மோசமாக விமர்சிப்பதற்கும் என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தான் காரணம். அவர்தான் பணம் கொடுத்து இந்த மாதிரி வேலைகளை செய்ய சொல்கிறார் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Karthik Kumar (@evamkarthik)

கார்த்திக்குமார் பதிவு:

இப்படி இவர் பேசி இருப்பதை பார்த்த நடிகர் கார்த்திக் குமார், நான் ஒரு ஓரின சேர்க்கையாளராக இருந்தேன் என்றால் நிச்சயம் அதை பொது வெளியில் பகிரங்கமாக சொல்லுவேன். அது சொல்வதற்கு எனக்கு எந்த கூச்சமும் கிடையாது. ஓரினச்சேர்க்கையாளர்கள் நடக்கும் அனைத்து முன்னெடுப்புகளிலும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலுமே கலந்து கொள்வேன். அதற்கு நான் ஓரின சேர்க்கையாளராக இருக்க வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. அவர்களுக்காக குரல் கொடுக்க ஒரு நல்ல மனிதனாக இருந்தாலே போதும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full