விருது வழங்கும் விழாவில் தனது திருமணம் குறித்து கார்த்திக் ராஜ் - என்ன சொல்லி இருக்கார்னு பாருங்களேன்

By Rajkumar · 1/8/2024

பிரபல சின்னத்திரை நடிகர் கார்த்திக் ராஜ் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. சின்னத்திரையில் ஒரு சில நடிகர்கள் தான் வெள்ளித்திரை நடிகர்களைப் போல வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கார்த்திக் ராஜ் கனா காணும் காலங்கள், ஆபீஸ், செம்பருத்தி போன்ற ஹிட் சீரியல்களில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் அதிகமாக கவர்ந்து விட்டார்.

அதிலும் இவருக்கு பெண் ரசிகர்கள் ஏராளம். இவருடைய க்யூட்டான நடிப்பு பல பெண்களுக்கு ஃபேவரட் என்று கூறி வருகின்றனர். ஆனால், சில காரணங்களால் செம்பருத்தி சீரியல் இருந்து விலகி இருந்தார். தற்போது இவர் மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'கார்த்திகை தீபம்' என்னும் சீரியலில் நடித்து வருகிறார். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக போகும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஃபேவரிட் ஆக்டர் விருது:

இந்நிலையில் கார்த்திகிற்கு, 'கார்த்திகை தீபம்' சீரியலுக்காக ஃபேவரிட் ஆக்டர் 2023 விருது வழங்கப்பட்டது. இந்த விருது முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கேட்டகிரிக்கான விருத்தாகும். இந்த விருதுதை இயக்குனர் எழில் மற்றும் சௌபாக்கியா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வரதராஜன் கார்த்திக்ராஜுக்கு வழங்கினார்கள். மேலும், விருது வாங்கியதற்கு பிறகு கார்த்திக் ராஜ், எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=dxSx5dlJ10U

கார்த்திக் ராஜா பேசியது:

விருது வழங்கியவர்களுக்கு நன்றி. எனக்கு ஓட்டு போட்டு சப்போர்ட் பண்ண எல்லா ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பின் ரமணன் சாருக்கு மிகப்பெரிய நன்றி. ஏனென்றால், அவர் தான் என்னை ஆக்டர் ஆக்கினார். மேலும் ஜீ தமிழுக்கும், நாராயணம் சார் மற்றும் சுஜு சாருக்கும் நன்றிகள். ஏனென்றால், நான் மீண்டும் 'கார்த்திகை தீபம்' சீரியலில் நடிப்பதற்கான காரணம் அவர்கள் தான் என்று கூறியிருந்தார்.

கார்த்திக்கிடம் கேட்கப்பட்ட கேள்விகள்:

அதற்குப் பிறகு கார்த்திக்கிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதாவது, குணா படமும், தளபதி படமும் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆனால் எந்த திரைப்படத்திற்கு கார்த்திக் போவார் என்று கேட்கப்பட்டது. அதற்கு கார்த்திக் உடனே 'தளபதி' என்று பதில் அளித்தார். பின் சிஎஸ்கே அல்லது ஆர்சிபி என்ற கேள்வி கேட்க, 'தல தோனி இருக்கும் சிஎஸ்கே' தான் என்றார் கார்த்திக். இசையமைப்பாளர்களில் பிடித்தவர் யார்? ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது இளையராஜா என்ற கேள்விக்கு கார்த்திக் சட்டென 'ஏ.ஆர்.ரஹ்மான்' தான் என்று கூறினார்.

திருமணம் குறித்து:

பின் பைக் அல்லது கார் என்ற கேள்விக்கு, சூப்பர் பைக் என்றார். கடைசியில் அரேஞ்சிடு மேரேஜ் அல்லது லவ் மேரேஜ் என கேள்வி எழுப்ப, 'நோ மேரேஜ்' என்று தனது ஸ்டைலில் பதில் அளித்தார். அவர் கூறிய பதிலைக் கேட்டு அரங்கமே கைத்தட்டியது. இவர் நடிக்கும் 'கார்த்திகை தீபம்' தொடரில் ஆர்த்திகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த சீரியல் ஜி பங்களாவில் ஒளிபரப்பான 'கிருஷ்ணகோலி' என்ற தொடரின் ரீமேக் ஆகும்.

behindtalkies AMP · Quick view
View full