ஒரு அப்பாவா ஒரு மகனுக்கு இத பண்ண மாற்றாரேன்னு ஒரு இருக்கம் இருந்துட்டே இருக்கு - வேதனையுடன் சொன்ன கார்த்திக் ராஜா.
தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். மேலும், இவரின் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம்.ஏன்னா, அந்த அளவிற்கு இவர் தன்னுடைய இசையால் எல்லோரையும் கட்டிபோட்டவர். இவர் 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.
இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.மேலும், இவர் கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். இதனால் இவர் பல விருதுகளை பெற்று இருக்கிறார். தற்போது இவர் படங்களில் பிசியாக இருக்கிறார். அதேபோல் இவருடைய ஒட்டு மொத்த குடும்பமும் இசையை சார்ந்தவர்கள்.
இவருடைய அண்ணன் கங்கை அமரன் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர். இவருடைய பிள்ளைகளான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரணி ஆகியோரம் மிக சிறந்த பாடகர்கள்.தற்போது தமிழ் சினிமா உலகில் பிரபலமான இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இவருடைய இசையில் வெளிவந்த பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
https://twitter.com/PrakashMahadev/status/1754897686975987767
அதேபோல் கார்த்திக் ராஜாவும் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் தான். இவர் பாண்டியன் என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின் இவர் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இருந்தாலும், தன் தந்தை, தன்னுடைய தம்பி போல் இவரால் சினிமாவில் நிலைத்து கொடிகட்டி பறக்க முடியவில்லை என்பதே சோகம்.
சொல்லப்போனால் கார்த்திக் ராஜா இசையமைத்த பல பாடல்கள் இளையராஜா இசையமைத்த பாடல்கள் என்று தான் பலரும் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். என்னதான் இரண்டு மகன்கள் இசையமைப்பாளர்கள் என்றாலும் யுவன் தான் இளையராஜாவின் செல்லப்பிள்ளை. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கார்த்திக் ராஜா தனது தந்தை தன்னிடம் எவ்வாறு நடந்துகொள்வார் என்று பேசி இருக்கிறார்.
https://www.youtube.com/shorts/WsjUnLRzrRI
அதில் ' அப்பா மீது பயம் தான், எல்லார் வீட்டிலும் பேசுவது போல ஒரு அப்பாவிடம் நாங்கள் பேச முடியாது. அவர் என்னிடம் பேசுவதையே பெருமையா நினைப்பேன் எப்போதும் ஒரு சண்டையாகவே போய் கொண்டு இருக்கும். என் இசையை போட்டு காண்பித்தாலே ச்சீ தூன்னு துப்பிடுவார். அப்போதெல்லாம் எனக்கு கஷ்டமாக இருக்கும். நம்மை வழி நடந்த மாற்றாங்களே என்ற இருக்கம் இருந்து கொண்டே இருக்கும்' என்று கூறியுள்ளார்.