நீயா நானுக்கும் தமிழா தமிழாக்கும் இதான் வித்யாசம் - கருபழனியப்பன் அளித்த பேட்டி.
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கரு.பழனியப்பன். இவர் காரைக்குடியைச் சேர்ந்தவர். இவருக்கு சிறுவயதிலேயே தமிழ் மீதும், தமிழ் இலக்கியத்தின் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் பல பட்டிமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். பின் 1994 ஆம் ஆண்டில் சினிமாவிற்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் பார்த்திபன் உடன் புள்ள குட்டிக்காரன், மற்றும் ஹவுஸ் புல் ஆகிய படங்களில் பணியாற்றினார். அதற்கு பின் இரண்டு வேறு இயக்குனர்களிடம் என்னை இயக்குனராக பணிபுரிந்தார். பின் துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எழிலிடமும் பழனியப்பன் பணிபுரிந்தார்.
https://twitter.com/vijaytelevision/status/1568834468743450625
அதற்கு பிறகு தான் இவர் நடிகராகவும் இயக்குனராகவும் ஆனார். பார்த்திபன் கனவு என்ற படத்தின் மூலம் இவர் முதன் முதலாக இயக்குனரானார். அதனைத் தொடர்ந்து சில படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபலமான தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கிறார். இந்த நிலையில் இவர் சமூக வலைதளத்தில் திடீர் என்று trollகளை சந்தித்து வந்தார்.
அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை தழுவி ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழா தமிழா என்று ஒளிபரப்பி வருகிறது இதில் நடிகரும் இயக்குனருமான கரு பழனியப்பன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வாரங்களுக்கு கரு பழனியப்பன் சமூக வலைதளத்தில் கேலிகளுக்கு உள்ளாகி இருந்தார்.
https://twitter.com/Amaithi23/status/1568990825153167360
அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் Vs கணவர்கள்
கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பப்பட்ட நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது கடந்த வாரம் வீட்டு வேலை செய்யும் பெண்கள் மற்றும் வீட்டின் முதலாளிகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது இதில் வீட்டு வேலை செய்யும் பெண்களின் பேச்சும் அவர்களுக்கு ஆதரவாக பேசிய கோபிநாத்தின் பேச்சும் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் மற்றும் அவரது கணவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
படிக்காத தந்தையின் ஏக்கம் :
இந்த நிகழ்ச்சியில் மனைவி ஒருவர் தன் கணவருக்கு படிக்கத்தெரியாது, மகளின் ரேங்க் கார்டை கூட அவர் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு கையெழுத்து போடுவார் என்று ஏளனமாக பேசி இருந்தார். உடனே கோபிநாத் அந்த பெண்ணின் மகளை அழைத்து அவருக்கு சிறந்த அப்பா என்று பரிசையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோபிநாத் பேசிய 'ஆனந்தமாக வாழ அறிவாக இருக்க அவசியம் இல்லை' போன்ற வசனங்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்தது.
தமிழா தமிழா vs நீயா நானா :
அதே போல ஒரு தந்தையின் ஏக்கத்தை புரிந்துகொண்ட கோபிக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வந்த நிலையில் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கருபழனியப்பனை பலர் கேலி செய்து வந்தனர்.கருப்பு பழனியப்பனின் தமிழா தமிழா நிகழ்ச்சி கேலிக்கு உள்ளாகி இருக்கும் மற்றொரு முக்கிய காரணமே நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் பெரும்பாலும் யாரையும் உரிமையில் பேசுவது கிடையாது. அதேபோல விவாதங்களில் பெரும்பாலும் மக்கள் நினைக்கும் கருத்துக்களையே கோபிநாத் முன்வைத்து வருகிறார்.
கேலி உள்ளான கருபழனியப்பன் :
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கரு பழனியப்பன் நீயா நானா நிகழ்ச்சி குறித்து பேசி இருக்கிறார். அதில் 'என்னை ஏற்கனவே பாராட்டிய போது அதை நினைத்து நான் சந்தோஷப்படுத்த கிடையாது. அதேபோலத்தான் என்னை கேடு செய்த போதும் நான் அதைப்பற்றி வருத்தப்பட மாட்டேன். நீயா நானா என்பது சர்க்கஸில் பார் விளையாடுவது போல. 15 ஆண்டுகளாக அந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் பழகி விட்டார்கள் அது சிறப்பான நிகழ்ச்சி என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
https://www.youtube.com/watch?v=wBIon3IuFqc
52 எபிசோட் கடந்தால் போதும்னு நினைத்தேன் :
அவர்கள் ரஜினிகாந்த் நாம் நளினிகாந்த் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் எப்போதும் சொல்லுவேன். அதேபோல நிகழ்ச்சியை தொடங்கிய எத்தனையோ பேர் விழுந்து இருக்கிறார்கள் ஆனால் எங்கள் நிகழ்ச்சி நின்று விட்டதே அதுவே பெரிய விஷயம்தான். நீயா நானாவின் பல நிகழ்ச்சியில் நான் பெரியார் பற்றி பேசி இருக்கிறேன் அதை பார்த்து தான் என்னை தமிழா தமிழா நிகழ்ச்சி தொகுத்து வழங்க அழைத்தார்கள். தமிழா தமிழா நிகழ்ச்சி ஆரம்பித்த போது 52 எபிசோட் கடந்தால் போதும் என்று நினைத்தேன். ஆனால், 165 எபிசோடை கடந்துவிட்டோம் என்று பேசி இருக்கிறார்.