தனுஷ் சூஸ் பண்ண ஆட்கள் பெரிய இடத்தில இருக்காங்க, ஆனால் - நடிகர் கருணாஸ் ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கென் கருணாஸ். இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ் மகன் ஆவார். கருணாஸ் ’நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இந்த ஒரு படத்திலேயே இவர் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். பின்னர் கருணாஸ் அவர்கள் பல படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து தனெக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்.
அதேபோல் இவர் மகன் கென் 2016 ஆம் ஆண்டு வெளியான அழகு குட்டி செல்லம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது தனுஷ் அவர்களின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் தான். இந்த படத்தில் கருணாஸின் மகன் கென் நடிப்பை பார்த்து பல பேர் பாராட்டினார்கள். இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருந்த விடுதலை 2 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கென் நடித்திருந்தார்.
கென் கருணாஸ் குறித்த தகவல்:
இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் நடித்திருந்தார். பாராட்டப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து வாத்தி என்ற படத்திலும் கென் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்தார்.
இதற்கிடையில் இவர் தனுஷினுடைய சில படங்களில் உதவி இயக்குனராகம் பணியாற்றி இருக்கிறார். தற்போது இவர் யூத் என்ற படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.
கருணாஸ் சொன்னது:
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய பிரீ ரிலீஸ் ஈவென்ட் இன்று நடைபெற்றிருக்கிறது. இதில் நடிகர் தனுஷின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அப்போது மேடையில் பேசிய கருணாஸ், காதல் கொண்டேன் படத்தை பார்த்துவிட்டு இந்திய சினிமாவுக்கு தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறந்த நடிகனை கொடுத்து இருக்கீங்க என்று செல்வராகவனிடம் நான் சொன்னேன்.
இந்த சின்ன வயசில் ரெண்டு தேசிய விருது வாங்கின ஒரு நடிகர் தனுஷ் மட்டும் தான். இவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் நிறைய கேலி விமர்சனங்கள் வந்தது.
https://www.youtube.com/watch?v=M2w1WUwrZzI
தனுஷ் பற்றி சொன்னது:
நிறைய பத்திரிகைகள் எல்லாம் எதுக்கு நடிக்க வந்திருக்கார் என்றெல்லாம் விமர்சனம் எழுதினார்கள். ஆனால், இன்றைக்கு இந்த அளவுக்கு வந்திருக்கிறார். 12 வயதில் இருந்து நான் சினிமாவில் தான் இருக்கிறேன். சினிமாவை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. சினிமாவுக்கு உண்மையாக இருந்தால் சினிமா நம்மை ஒருபோதும் கைவிடாது. அப்படி நான் வைத்த நம்பிக்கைதான் என் மகன் கென். இன்னைக்கு தவிர்க்க முடியாத சூழலால் அவன் இயக்குனராகியிருக்கிறான். ஆனால், அதை கத்துக்கோன்னு சொன்னது தனுஷ் தான். தனுஷ் தேர்வு பண்ண ஆட்கள் யாரும் தோற்றது கிடையாது. எல்லோரும் பெரிய இடத்தில் தான் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.