ப்பா, கருப்பன் பட நடிகை தான்யாவா இது. என்ன இப்படி ஸ்லிம் ஆகிட்டார்.

By Rajkumar · 19/5/2020

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'கருப்பன்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன். இவர் தமிழில் பழம் பெரும் நடிகையான ரவிச்சந்திரனின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது. கருப்பன் படத்திற்கு முன்பாக தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிரிந்தாவனம் ‘ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், கருப்பன் படம் தான் இவருக்கு ஒரு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

அதே போல கருப்பன் படம் வெளியான பின்னர் தான் இவர் பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பதே பலருக்கும் தெரிய வந்தது. இருப்பினும் கருப்பன் படத்திற்கு பின்னர் சிபி ராஜுடன் 'மாயோன்' என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த திரைப்படம் இன்னும் வெளிவராமல் தான் இருக்கிறது. இதை தவிர இவருக்கு வேறு எந்த படத்தின் வாய்ப்பும் வரவில்லை.

சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த வந்த தான்யா அடிக்கடி போட்டோ எடுத்து நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வந்தார் அதேபோல கருப்பன் படத்தில் இவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் பார்த்த ரசிகர்களுக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுக்க மாடர்ன் உடைகளில் இருக்கும் புகைப்படங்களைக் கண்டு சற்று வியந்து போனார்கள்.

https://www.instagram.com/p/CASkC-3DQf6/?igshid=ktljvgnadxsw

இந்த நிலையில் நடிகை தான்யாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் நடிகை தான்யா முன்பை விட தற்போது படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். கருப்பன் படத்திற்கு பின்னர் நடிகை தான்யா, கிஷோர் இயக்கத்தில் மாயோன் என்ற படத்தில் நடித்து வந்தார். ஆனால், அந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full