'கருப்பு' படத்தில் பட்டைய கிளப்பும் இந்த இந்திரன்ஸ் யார் தெரியுமா? அதிருப்தியில் ரசிகர்கள்
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், திரிஷா, சுவாசிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். பல பிரச்சினைகளைத் தாண்டி கருப்பு படம் வெளியாகி இருக்கிறது.
படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்களில் கருப்பு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதோடு படத்தினுடைய கிளைமேக்ஸ் காட்சியில் வரும் போது சிலர் தியேட்டரில் சாமி ஆடும் வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைலாகி வருகிறது. மேலும், இந்த படத்தில் சூர்யாவுக்கு பிறகு தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தவர் இந்திரன்ஸ்.
கருப்பு படம்:
முதல் பாதி முழுக்க சூர்யாவை விட அதிகமாக ஸ்கிரீன் பிரஷன்ஸ் இருந்தது இந்திரன்ஸ்க்கு தான். இவர் கருப்பு படத்தில் ஒவ்வொரு சீனிலும் சும்மா பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். இந்த நிலையில் இவரை பற்றி பலரும் அறியாத தகவலை தான் இங்கு பார்க்க போகிறோம். இந்திரன்ஸ் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர். இவருடைய நடிப்புக்கு தீனி போடும்
எந்த கதாபாத்திரம் என்றாலும் புகுந்து விளையாடக் கூடியவர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் டைலர் ஆகத்தான் பணியாற்றி வந்திருந்தார்.
இந்திரன்ஸ் சினிமா பயணம்:
இவருக்கு நடிப்பின் மீது சிறு வயதிலிருந்து ஆர்வம் இருந்ததால் நடிப்பு பட்டறையில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை படிப்படியாக வளர்த்திருந்தார். அதற்கு பிறகு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த சூதாட்டம் என்ற மலையாள படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சின்ன சின்ன வேடங்களில் படங்களில் நடித்து வந்தார். அதற்கு பின் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த முன்ரோதுரத் படம் தான் இவருடைய திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்திரன்ஸ் குறித்த தகவல்:
அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் மிரட்டி வருகிறார். மேலும், இவருடைய நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசும் விருது வென்றார். அதோடு சிங்கப்பூர் தெற்காசி சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருதை வென்றார். கடந்த ஆண்டு கூட ஹோம் என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறுவது தான் லட்சியமாகவே வைத்திருக்கிறார். இவர் ஏழாம் வகுப்பு வரை தான் படித்திருந்தார்.