கருப்பு பட கிளைமேக்ஸ்ல சூர்யா சாருக்கு டூப் போட்டாங்க - 'டூப் கலைஞர்' கோட்டீஸ்வரன் எக்ஸ்குளுசிவ்
'டூப் கலைஞர்' கோட்டீஸ்வரன் எக்ஸ்குளுசிவ்
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. தற்போது இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் கருப்பு. இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், திரிஷா, சுவாசிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். பல பிரச்சினைகளைத் தாண்டி கருப்பு படம் வெளியானது.
படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்களில் கருப்பு படத்தை ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு இது சூர்யா உடைய மிகப்பெரிய கம்பேக் படமாக இருந்தது. மேலும், இந்த படத்தில் ஒவ்வொரு ஸ்டண்ட் காட்சிகளும் மிகப்பெரிய அளவில் பிரமிக்க வைத்தது. இதற்கு பின்னால் நிறைய கலைஞர்கள் என்னுடைய உழைப்பு இருக்கிறது. கஷ்டமான காட்சிகளில் நடிகர்களுக்கு பதிலாக டூப் ஆர்டிஸ்ட்களை வைத்து செய்வார்கள். அப்படி ஒரு டூப் ஆர்டிஸ்ட் தான் கோடீஸ்வரன்.
கருப்பு படம்:
இவர் பல படங்களில் வேலை செய்திருக்கிறார். தற்போது இவர் சூர்யாவிற்கு கருப்பு படத்திலும் டூப் போட்டு இருக்கிறார். இந்நிலையில் கருப்பு பட அனுபவம் தொடர்பாக அளித்த பேட்டியில் கோடீஸ்வரன், சினிமாவில் நான் ரொம்ப வருடம் ஆக டூப் ஆர்ட்டிஸ்டாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், நான் டூப் ஆர்ட்டிஸ் ஆகணும்னு சினிமாவுக்கு வரவில்லை. என்னுடைய ஆரம்ப கால இலட்சியமே ஒரு போலீஸ் அதிகாரி தான். அதுக்காக தீவிரமாக முயற்சி பண்ணி தேர்வு எல்லாம் எழுதினேன். ஆனால், வெறும் ஒரு மார்க் 2 மார்க் வித்யாசத்தில் வேலை வாய்ப்பு என் கையை விட்டு போனது. நான் ஏற்கனவே ஒரு ஜிம்னாஸ்டிக் பிளேயர்.
கோடீஸ்வரன் பேட்டி:
அதனால் என்னை ஸ்டண்ட் யூனியனில் ஃபைட்டராக சேர்த்துக் கொண்டார்கள். அப்படி 2011ல் இருந்து 2013 வரைக்கும் தொடர்ந்து நான் ஃபைட்டராக வேலைப்பார்த்தேன். அதற்கு பிறகு பள்ளிக்கூடத்தில் பிடி வாத்தியாராக சேர்ந்தேன். கொரோனா சமயத்தில் சம்பளம் தர முடியாத சூழல் உருவானது. அதனால் மறுபடியும் ஃபைட்டராக திரும்ப வந்துவிட்டேன். நான் நிறைய படங்களுக்கு டூப் என்று சொல்லக்கூடிய பாடி டபுள் ஆர்டிஸ்ட் ஆக வேலை செய்தேன். அதை தொடர்ந்து சூர்யா சாருக்கு முதல் முறையாக கருப்பு படம் முழுவதுமாக டூப் பண்ணினேன்.
கருப்பு படம் பற்றி சொன்னது:
சூர்யா சார் லுக்கில் ஏத்த மாதிரி முடி வைத்து செக் பண்ணி பார்த்துட்டு ஓகே பண்ணினார்கள். என் மாஸ்டருக்கு போகப்போக என்னோட வொர்க் பிடித்து போய் படம் முழுக்க நிறைய என்னை யூஸ் பண்ணிக்கொண்டார். என்னோட உடல் மொழியும் சூர்யா சாரினுடைய உடல் மொழி சரியாக பொருந்தி போனது. கருப்பு படத்தில் குதிரை ஓட்டிட்டு வருகிற ஓபனிங் பைட், இடைவெளி காட்சியில் வரும் பைட் சீன், மெட்ரோ பைட், ஹைவே கார் பைட், கிளைமாக்ஸ் என நிறைய இடங்களில் நான் டூப் பண்ணி இருக்கிறேன். ஆனால், ஒரு யதார்த்தமான உண்மை என்னவென்றால் இந்த துறையில் டூப் ஆர்டிஸ்ட்களுக்கு பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைக்காது. அது தான் கொஞ்சம் வருத்தம் என்று கூறி இருக்கிறார்