இளையராஜாவைக் காயப்படுத்தும் எண்ணம் எங்களுக்கு கொஞ்சமும் இல்லை - கருப்பு படக்குழு தெரிவித்த வருத்தம்
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், திரிஷா, சுவாசிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். பல பிரச்சினைகளைத் தாண்டி கருப்பு படம் வெளியாகி இருக்கிறது.
படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்களில் கருப்பு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதோடு படத்தினுடைய கிளைமேக்ஸ் காட்சியில் வரும் போது சிலர் தியேட்டரில் சாமி ஆடும் வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைலாகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கருப்பு படத்தில் இளையராஜா பாடல் பயன்படுத்தியது தொடர்பாக எழுந்து இருந்திருக்கும் சர்ச்சை தான் வைரல் ஆகி வருகிறது.
கருப்பு படம்:
அதாவது, கருப்பு படத்தின் பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும் இந்த படத்தின் ஒரு காட்சியில் அலை ஓசை படத்தில் இடம் பெற்ற போராடடா
என்ற பாடலை பயன்படுத்தியிருப்பார்கள். அதற்குப் பிறகு அந்த காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பற்றிய ஒரு வசனமும் வந்திருக்கும்.
https://www.youtube.com/watch?v=gq3fnNWXfVY
இளையராஜா பாடல் சர்ச்சை:
அந்த வசனத்தை வைத்ததற்காக தான் கருப்பு பட குழுவினரை பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்து கருப்பு படக் குழுவினர் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார்கள். அதில், 'கருப்பு' திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா ஐயாவின் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியைக் கடத்தும் நோக்கத்திற்காகக் கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு.
படக்குழு அறிக்கை:
50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்குச் சிறிதளவும் இல்லை. உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசைஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறி இருக்கிறார்.