தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து: செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கடுப்பாகி தனுஷ் தந்தை சொன்னது
தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த கேள்விக்கு கஸ்தூரி ராஜா கொடுத்து இருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே தனுஷ்-ஐஸ்வர்யா விவகாரத்து பஞ்சாயத்து குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் இருந்து வந்தாலும் அதில் ஒரு சிலர்கள் மட்டுமே இறுதிவரை நன்றாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் 18 ஆண்டு காலமாக சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து இருந்தவர்கள் தனுஷ்-ஐஸ்வர்யா.
இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. ஐஸ்வர்யா-தனுஷின் இந்த முடிவு பலருக்கும் பேர் அதிர்ச்சியை தந்தது. இதை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு இருந்தார்கள்.
தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு:
மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து இருந்தார்கள். ஆனால், ஒரு பலனும் இல்லை. அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தனுஷ் படங்களை இயக்குவது, நடிப்பது, தயாரிப்பது என்று பிசியாக இருக்கிறார். அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு:
அந்த வகையில் கடைசியாக தன்னுடைய தந்தை ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கி இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதற்கிடையில் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிவதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இதை அடுத்து நேற்று இந்த மனு குடும்ப நல நீதிமன்றம் நீதிபதி சுபா தேவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா இருவருமே நேரில் ஆஜர் ஆகி இருந்தார்கள்.
நீதிபதி உத்தரவு:
அப்போது விசாரணையில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவருமே பரஸ்பரமாக விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்கள். இதை அடுத்து நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பதிவேட்டில் இருவருமே கையெழுத்து போட்டு இருந்தார்கள். மேலும், இந்த விவாகரத்து வழக்கினுடைய தீர்ப்பை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதோடு கூடிய விரைவிலேயே இவர்களுக்கு விவாகரத்து கிடைத்து விடும் என்றும் கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கஸ்தூரி ராஜா சொன்ன பதில்:
இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் செய்தியாளர்கள்,
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதனால் கடுப்பான கஸ்தூரிராஜா, இது நமக்கு சம்பந்தம் இல்லாத கேள்வி. இதனால் தான் நான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பதில்லை என்று கோபமாக பேசி அந்த இடத்தை விட்டு சென்றிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் வைரலாகி வருகிறது