ஹபீபி படத்தை பார்க்கும் போது ஒரு சம்பவம் நடந்தது - மனம் திறந்த நடிகர் கஸ்தூரி ராஜா
ஹபீபி படத்தை பார்க்கும் போது ஒரு சம்பவம் நடந்தது - நடிகர் கஸ்தூரி ராஜா
இயக்குனர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஹபீபி. இந்த படத்தை நேசம் என்டர்டையின்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் கஸ்தூரிராஜா, ஈசா, அனஸ்ரேயாராஜன், தனஸ்ரீசுதாகரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சி எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதை கொண்டு சென்ற விதமும் இயக்குனர் சிறப்பாக கொடுத்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. இதற்கு ஹபீபி பட குழுவினரை நடிகர் தனுஷ் பாராட்டி பதிவு போட்டு இருந்தார்.
ஹபீபி படம்:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய வெற்றி விழா நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனரும் நடிகருமான கஸ்தூரிராஜா, சமீபத்தில் எங்கள் வீட்டில் ஒரு நிகழ்வு நடந்தது. அது என்னவென்றால், நாங்கள் ஒட்டுமொத்த குடும்பமாக சேர்ந்து இந்த படத்தை பார்த்தோம். நான், என்னுடைய மனைவி, செல்வராகவன், தனுஷ், பேரன் பேத்திகளின் எல்லோருமே தனுஷ் வீட்டில் சேர்ந்து தான் இந்த படத்தை பார்த்தோம். அப்போதுதான் ஒரு சம்பவம் நடந்தது.
கஸ்தூரி ராஜா பேட்டி:
என் மகள் விமலா கீதா சிங்கம் மாதிரி. அவளை பார்த்தாலே எங்கள் வீட்டில் எல்லோருமே பயப்படுவார்கள். அவள் இந்த படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போது அமைதியாக இருந்தார். பின் இறுதி காட்சி வரும்போது உடனே எழுந்து வெளியே சென்று விட்டார். அரை மணி நேரம் அழுதார். நான், ஏன்ம்மா அழுற என்று கேட்டேன். அதற்கு அவர், ஏன் டாடி இப்படி எல்லாம் நடிக்கிறீங்கன்னு கேட்டாங்க. எனக்கே அது ஒரு புதுவித அனுபவமாக இருந்தது.
சம்பவம் பற்றி சொன்னது:
என் பொண்ணு அழுது பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுதான் தியேட்டர் ரிசல்ட் ஆகவும் இருந்தது. தனுஷ் என்னை மேலையும் கீழையும் பார்த்தார். சூப்பராக பண்ணியிருக்கீங்க, நான் கூட எண்ணமோ நினைத்தேன். நல்லா நடிச்சு இருக்கீங்க அப்பா. எங்கேயாவது ஏமாந்து போயிருவீங்கன்னு நினைத்தேன். ஆனால், கௌரவமான படத்தில் நடித்திருக்கிறீர்கள் என்று சொன்னார். இந்த பெயரை எனக்கு வாங்கிக் கொடுத்த மீரா கதிரவன் சாருக்கு ரொம்பவே நன்றி என்று கூறியிருக்கிறார்.