ஒத்த ரூபா பாட்டுக்காக எனக்கிட்ட அனுமதியே கேட்கல, ஆனால் அஜித் - வேதனையில் கஸ்தூரி ராஜா பேட்டி

By subhashini · 18/5/2025

குட் பேட் அட்லி படத்தில் ஒத்த ரூபா தாரேன் பாடல் வந்தது தொடர்பாக வேதனையில் கஸ்தூரிராஜா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை கடின உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் செய்து இருப்பதாக கூறப்பட்டது. அதோடு இந்த படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது. இதை ரசிகர்களும் கொண்டாடி இருந்தார்கள்.

குட் பேட் அக்லி:

அதிலும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு பிரியா வாரியார் நடனமாடிய காட்சி எல்லாம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்தது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூபாய் தாரேன் பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது. இந்த பாடலுக்காக மொத்த ரூபாயையும் கொட்டிக் கொடுத்து படம் ஹிட் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கமெண்ட்களை அள்ளி வீசி இருந்தார்கள். இந்த பாடலுக்கு நடனம் ஆடிய நடன இயக்குனர் மாஸ்டர் ஜான் பாபு. இந்த பாடலின் ஆசிரியர் கஸ்தூரி ராஜா தான். இந்த நிலையில் இந்த பாடல் தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கஸ்தூரி ராஜா, நாட்டுப்புற கூத்து நடந்து கொண்டிருக்கிறது.

கஸ்தூரி ராஜா பேட்டி:

நாங்கள் அவர்கள் செல்லும் இடமெல்லாம் போனோம். 15 நாட்கள் அவர்களுடன் தான் சுற்றுகிறோம். அதை வைத்து தான் நாட்டுப்புறப்பாட்டுன்னு டைட்டில் வந்தது. அடுத்து தான் பாட்டு வருகிறது. அவங்க பாடினதில் ஒத்த ரூபாய் தாரேன் பாட்டு எழுதிட்டேன். அதை எழுதிக் கொண்டு போய் தான் நான் இளையராஜா சாரிடம் கொடுத்தேன். முதலில் மறுத்தார். அதற்கு பிறகு ஒத்துக் கொண்டார். அந்த பாட்டுக்காக 365 நாட்கள் படம் ஓடியது. நாட்டுப்புறப்பாட்டு படத்தில் ஒரு சின்ன ரோலுக்காக குஷ்பூவிடம் போய் பேசினோம். ரொம்ப பணமில்லை, உங்களுக்கு பணம் கொடுத்தால் சூட்டிங் பண்ண முடியாது என்று நிலைமையை எடுத்து சொன்னோம்.

https://www.youtube.com/watch?v=mYzx2ohon-o

ஓத்த ரூபா தாரேன் பாடல்:

உடனே குஷ்பு, நான் பணம் கேட்கவில்லை என்று சொல்லி 36 மணி நேரத்தில் விடாமல் தலையில் கரகத்தை வைத்து அந்த பாடலுக்கு நடனமாடி கொடுத்தார். இப்போது அஜித் நடித்த குட் பேட் அக்லியில் ஒத்த ரூபா தாரேன் பாட்டு வந்திருக்கிறது. எனக்கு முதலில் தெரியாது. நான் ப்ரொடியூசர் மேல் வழக்கு போடுவதில் எனக்கு விருப்பமும் இல்லை. அவர் நம்ம மக்களுக்கு சாப்பாடு போட்டு இருக்கிறார். இப்போது பார்த்தால் அஜித் சார் பட பாட்டுன்னு போட்டு ஆடுகிறார்கள். கஸ்தூரிராஜா பாட்டு என்று வரவில்லை.

வேதனையில் கஸ்தூரி ராஜா சொன்னது:

முதலில் போன் பண்ணி அனுமதி கேட்டிருக்கலாம். கேட்டால் தர போறோம். என்னிடம் அனுமதியும் கேட்கவில்லை. என்னோட பாட்டு குட் பேட் அக்லி படத்தில் இருக்கிறது. பாடல் ஆசிரியர் என்று என் பெயர் போடனுமா? இல்லையா? ஆனால், அவர்கள் போடவே இல்லை. அப்ப இது என்ன நாகரீகம். அவ்வளவு சிரமப்பட்டு எடுத்துவிட்டு வந்த பாட்டை கேட்காமல் போட்டால் என்ன அர்த்தம்? சீனியர் என்ற முறையில் உங்கள் பாடல் வரிகளை பயன்படுத்துகிறோம் என சொல்லி இருக்கலாம் தானே என்று வேதனையில் கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full