அன்று ஜோடியாக கதாநாயகி பட்டம், இன்று ஜோடியாக சீரியல் வாய்ப்பு பெற்ற இரட்டை சகோதரிகள்

By Rajkumar · 23/8/2024

'கதாநாயகி' டைட்டில் வின்னர்களான இரட்டை சகோதரிகள் புதிய சீரியலில் கபிட் ஆகியிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான புது நிகழ்ச்சி தான் 'யார் அடுத்த கதாநாயகி'. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா இருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சி அடுத்த கண்ணம்மா, அடுத்த பாக்கியா யார் என்ற தேடலுக்கான நிகழ்ச்சி. இதில் வெற்றி பெறும் நபர்களை வைத்து சீரியல் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை குரேஷி மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி இருந்தார்கள்.

கதாநாயகி நிகழ்ச்சி:

ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கடுமையான போட்டிகள் நடந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற இரட்டை சகோதரிகள் ரூபினா மற்றும் ரூபிஸுனா தான் டைட்டில் பின்னர் பட்டத்தை பெற்றார்கள். இவர்களுடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். இவர்கள் டைட்டில் வின்னர் ஆனதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

ரூபினா மற்றும் ரூபிஸுனா பேட்டி:

அதனைத் தொடர்ந்து பேட்டி அளித்த இரட்டை சகோதரிகள், எங்களை கதாநாயகி நிகழ்ச்சி செதுக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு தான் ஆக்டிங்கில் எத்தனை விஷயம் இருக்கு என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். முதல் முதலில் அந்த மேடையில் ஏறும் போது, அந்த பெரிய மேடை லைட்டிங் எல்லாமே பயமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நாங்கள் மேடை ஏறும்போதும், இது எங்களுக்கான மேடை நன்றாக பண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் நடிப்போம். எங்களுக்கு டான்ஸ் மூலமாக தான் நடிப்பில் ஆர்வம் வந்தது.

நடிப்பு குறித்து சொன்னது:

மேலும், டான்ஸ் தான் நடிப்பிற்கு தொடக்கப்பள்ளி. துடிக்கும் கரங்கள் இயக்குனர் வேலுதாஸ் அண்ணா எங்களை பார்த்த உடனே அந்த படத்தில் நடிக்க செலக்ட் பண்ணினார். எங்களுக்கு ஆடிஷன் எதுவுமே பண்ணவில்லை. எங்க மேல அவருக்கு என்ன நம்பிக்கை இருந்தது என்று தெரியவில்லை. ஆனால், அங்கு சொல்லிக்கொடுத்த மாதிரி நடிச்சு விட்டோம். அந்தப் படம் தான் நடிப்பில் இன்னும் நிறைய கத்துக்கணும் என்று ஆர்வத்தை கொடுத்தது. எங்களுக்கு உறுதுணையாக எங்கள் அம்மா இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்கள்.

புதிய சீரியல்:

இந்நிலையில், கதாநாயகி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷாலினி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்களான இரட்டை சகோதரிகள் இருவரும் மலையாள சீரியலில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். அந்த சீரியல் இவர்கள் இருவருக்கும் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்து கொண்டிருக்கிறது. புதிய சீரியலில் கமிட் ஆனதிற்காக இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full