இந்திய பாஸ்போர்ட்டை காண்பித்தும் நம்பவே இல்லை - அமெரிக்காவில் கைது செய்யப்பட்டது பற்றி `கத்தி' பட வில்லன் சொன்னது

By subhashini · 5/2/2025

விஜய் பட வில்லனை அமெரிக்காவில் கைது செய்து இருந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் விஜய்யின் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகியிருந்த படம் கத்தி.

இந்த படத்தில் சமந்தா, தோத்தா ராய் சவுத்ரி, சதீஷ், நீல் நிதின் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த கத்தி படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

கத்தி படம்:

விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சனையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருந்தார். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ். இவர் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் பின்னணி பாடகர் நிதின் முகேஷின் மகன் ஆவார்.

நீல் நிதின் முகேஷ் குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் மறைந்த பின்னணி பாடகர் முகேஷ் அவர்களின் பேரனும் ஆவார். இவருடைய குடும்பமே இசைக் கலைஞர்கள். தன் தாத்தா, தந்தையைப் போல இவரும் பாடகராகாமல் நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.இவர் 90கால கட்டத்தில் சினிமா உலகில் நுழைந்து தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஹிந்தி, தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு உட்பட பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

நீல் நிதின் முகேஷ் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அமெரிக்க விமான நிலையத்தில் தன்னை கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீல் நிதின் முகேஷ் கூறியிருந்தது, நான் அமெரிக்காவில் நியூயார்க்கில் ஒரு படத்தில் நடிப்பதற்காக சென்றிருந்தேன். அப்போது நியூயார்க் விமான நிலையத்தில் என்னை தடுத்து நிறுத்தி விட்டார்கள். பின் அவர்கள் நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் என் இந்திய பாஸ்போர்ட்டை காண்பித்தேன். அப்போதுமே அவர்கள் என்னை நம்பவே இல்லை.

கைது செய்யப்பட்ட காரணம்:

என்னை மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். ஆனால், என்னை பதிலளிக்க அனுமதிக்கவே இல்லை. கிட்டத்தட்ட 4 மணி நேரம் என்னை கைது செய்து வைத்து விசாரித்தார்கள். ஒரு கட்டத்தில் என்னை கூகுளில் தேடும்படி கேட்டேன். அப்போதுதான் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்தார்கள். அதற்குப் பிறகு என் அப்பா, தாத்தா குறித்தெல்லாம் கேட்டுவிட்டு அதை உறுதி செய்த பிறகு தான் என்னை விடுவித்தார்கள் என்று கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full