என்னை எல்லாரும் 'ஓடிடி ஹீரோன்னு' தான் சொல்லறாங்க, ஆனால் - 'லிங்கம்' பட விழாவில் நடிகர் கதிர் எமோஷனல்

'லிங்கம்' பட விழாவில் நடிகர் கதிர் எமோஷனல்

By subhashini · 25/6/2026

எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இடம் லிங்கம். இந்த வெப் சீரிஸ் இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகயிருக்கிறது. இந்த வெப் சீரிஸில் நடிகர் கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் திவ்யபாரதி, பூர்ணிமா ரவி, போஸ் வெங்கட் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் பேசிய நடிகர் கதிர், ஒரு படம் முடிந்தாலே அடுத்து என்ன படங்கள் இருக்கிறது என்று கேட்க தொடங்கி விடுவார்கள். அந்த மாதிரியான கேள்விகளுக்கு காத்திருக்கும் மனநிலையும் நமக்கு உருவாகிவிடும். நமக்கு கமர்சியல் சென்சே இல்லையான்னு டவுட் வரும்போது தான் இந்த ஓடிடி சான்ஸ் கிடைக்கும்.

கதிர் பேட்டி:

இப்போ எல்லோருமே என்னை 'ஓடிடி ஹீரோ' ன்னு தான் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், இதை நான் விமர்சனமாக பார்க்கவில்லை. சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறேன். சுழல் 1& 2, லிங்கம் என ஒவ்வொரு சீரிசிலும் தியேட்டர் படம் மாதிரி தரத்தில் இருக்கும். அதனால் ஓடிடி-ல் ரெண்டு சீரிஸ் பண்ணா நாலு படம் நடித்த கணக்குகள் என்று என்னை நானே தேற்றிக் கொள்வேன்.

விமர்சனம் பற்றி சொன்னது:

தியேட்டர் ரிலீஸ் அன்னைக்கு மக்கள் பத்திரிகையாளர்களுடைய ரியாக்சனை நேரில் பார்க்கும் சந்தோஷமே தனிதான். மத்தபடி நடுவில் இருக்கிற ப்ராசஸ் எல்லாம் நம்மல போட்டு உருட்டி எடுத்து விடும். 2022ல் இயக்குனர் லட்சுமி சார் வந்து லிங்கம் கதையை சொன்னார். என்மேல நம்பிக்கை வைத்து கேங்ஸ்டர் கேரக்டரை கொடுத்தார். என் முகம் சாஃப்ட்டா இருந்தாலும் எந்த கேரக்டரையும் என்னால் மாசா பண்ண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது என்றார்.

கதிர் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கதிர். இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், சிகை, சத்ரு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அது அடுத்து இவர் பெரும்பாலும் வெப் சீரிஸில் தான் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த சுழல் 1,2 தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full