கற்றது தமிழ், கஜினி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுமியா யார் தெரியுமா ? - இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.

By Rajkumar · 7/3/2022

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது ஹீரோ, ஹீரோயினாக ஜொலித்து வருகின்றனர். விஜய் முதல் சிம்பு வரை பல டாப் நடிகர்கள் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள் தான். சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகை வெண்பாவிற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

தமிழ் திரையுலகில் 2007-ஆம் ஆண்டு வெளி வந்த படம் 'கற்றது தமிழ்'. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ராம் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். மேலும், முக்கிய வேடங்களில் கருணாஸ், அழகம் பெருமாள் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் அஞ்சலி நடித்த கேரக்டரின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிகை வெண்பா நடித்திருந்தார்.

வெண்பா நடித்த மற்ற படங்கள் :

அது தான் நடிகை வெண்பா அறிமுகமான முதல் படமாம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து சிவகாசி, கஜினி போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு வெளி வந்த படம் 'பள்ளிப் பருவத்திலே'. இதில் நடிகை வெண்பா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தினை இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் இயக்கியிருந்தார்.

நாயகியாக நடித்த படங்கள் :

'பள்ளிப் பருவத்திலே' படத்துக்கு பிறகு 'காதல் கசக்குதய்யா' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார் வெண்பா.ஆனால் , அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவிலை. இருப்பினும் இவருக்கு தொடர்ந்து ஒரு சில வாய்ப்புகள் வந்துகொண்டு இருந்தது. வழக்கமாக நடிகை வெண்பா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

போட்டோ ஷூட்டில் கலக்கும் வெண்பா :

இந்நிலையில், புதிதாக எடுக்கப்பட்ட போட்டோஷூட் ஸ்டில்ஸை வெண்பா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். வெண்பா பட்டு புடவையில் ஜொலிக்கும் இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. மேலும், ஸ்டில்ஸுக்கு ரசிகர்கள் அதிகமாக லைக்ஸ் போட்டு வருகின்றனர்.அதே போல சில மாடர்ன் உடை லுக்கிலும் வெண்பா அசத்தி வருகிறார்.

வெண்பா இறுதியாக நடித்த படம் :

கடைசியாக நடிகை வெண்பா நடிப்பில் வெளி வந்த படம் 'மாயநதி'. இந்த படத்தினை அசோக் தியாகராஜன் இயக்கியிருந்தார் .அதை தொடர்ந்து ஜி வி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான , 'ஆயிரம் ஜென்மங்கள்' என்ற படத்தின் நடித்து இருந்தார். இந்த படத்தினை இயக்குநர் எஸ்.எழில் இயக்கி இருந்தார். இந்த படமும் எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் மத்தியில் வரவெற்பை பெறவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full