KBC நிகழ்ச்சி - முதன்முறையாக ஒரு கோடி ரூபாய் வென்ற 14 வயது சிறுவன். வியந்து போன அமிதாப் பச்சன்.

By subhashini · 29/11/2023

ரியாலிட்டி நிகழ்ச்சியில் முதன்முதலாக ஒரு கோடி ரூபாய் பரிசை வென்றிருக்கும் சிறுவன் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்தியாவில் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று கேபிசி ஜூனியர்ஸ் வீக் (Kaun Banega Crorepati - KBC). இந்த நிகழ்ச்சி சோனி என்டர்டைன்மென்ட் டெலிவிஷனில் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சி 2000 ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் அளித்தால் 7 கோடி ரூபாய் வரை வெல்லலாம். இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். தற்போது இந்த நிகழ்ச்சியின் 15 வது சீசன் நடைபெற்று வருகிறது.

கேபிசி ஜூனியர்ஸ் வீக்:

இந்த நிகழ்ச்சி தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் தான் மயங்க். இவர் ஹரியானாவை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 14 வயதாகிறது. இந்த நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் கேட்ட கடினமான கேள்விகளுக்கு எல்லாம் மயங்க் சுலபமாக பதிலளித்து ஒரு கோடி ரூபாயை பரிசாக வென்று இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Sony Entertainment Television (@sonytvofficial)

மயங்க் வென்ற பரிசு:

அதுமட்டுமில்லாமல் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய் வென்ற முதல் சிறுவன் என்ற சாதனையையும் மயங்க் தட்டிச் சென்றிருக்கிறார். மேலும், இவருடைய அறிவு திறனை பாராட்டி ஹூண்டாய் -20 காரும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஒரு கோடி ரூபாயை தட்டி சென்ற சிறுவன் மயங்க் குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. அதோடு பலரும் மயங்க் புத்திசாலித்தனத்தை பாராட்டி வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

மயங்க் அளித்த பேட்டி:

இந்த நிலையில் இது குறித்து மயங்க் கூறி இருப்பது, இந்த நிகழ்ச்சியில் என்னுடைய அறிவை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு என்னை ஊக்கப்படுத்திய அமிதா பச்சன் சாருக்கும், அவருடன் அமர்ந்து விளையாட வாய்ப்பு அளித்தவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இந்த தருணத்தில் என்னை அதிர்ஷ்டசாலியாக நான் உணர்கிறேன். இவ்வளவு பெரிய தொகையை வென்ற இளயைப் போட்டியாளர் என்பது எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் பெருமை அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அமிதா பச்சன் குறித்த தகவல்:

இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அமிதாபச்சன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அதோடு இவர் அன்றும் இன்றும் என்றும் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகவே திகழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று சொல்லலாம். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர் என பன்முகம் கொண்டு வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full