இளையராஜாவை வம்பிழுத்த கவிஞர் வாலி, இந்த பாடலில் இவ்வளவு அர்த்தமா- என்ன பாடல்ன்னு பாருங்க
இளையராஜாவை பாட்டிலேயே கவிஞர் வாலி வம்பிழுத்திருக்கு தகவல் தான், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற கவிஞரும், பாடலாசிரியருமாக இருந்தவர் வாலி. இவருடைய உண்மையான பெயர் ரங்கராஜன். சிறுவயதிலிருந்தே இவருக்கு ஓவியம், கவிதை மீது அதிக ஆர்வம் கொண்டவர். பின் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தவுடன் இவர் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓவியக்கலை பயின்றார்.
அதற்குப் பின்பு வாலி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து 'நேதாஜி' எனும் கையெழுத்து பத்திரிகையை தொடங்கியிருந்தார். பின் இவர் கவிதைகள் எழுதுவது, ஓவியங்கள் வரைவது, வானொலிக்கு கதைகள் மற்றும் நாடகங்கள் எழுதுவது என்று இவருடைய வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. அதன் பிறகு, தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்று விளங்கிய ‘டி. எம். சௌந்தரராஜன்’ அவர்களால் சினிமாவிற்கு பாட்டெழுத சென்னைக்கு அழைத்து வரப்பட்டு இருந்தார் வாலி.
வாலி குறித்த தகவல்:
இதுவரை இவர் 15000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். வாலி அவர்கள் பக்தி, நட்பு, காதல், தத்துவம், என அனைத்து விதப் பரிமாணங்களிலும் பாடல்களை எழுதி எல்லா தலைமுறையினருக்கும் ஏற்ற பாடலாசிரியராக புகழ்பெற்றவர். அதோடு இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் கவிஞர் வாலி எழுதி புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று 'தசாவதாரம்' படத்தில் இடம்பெற்ற 'கல்லை மட்டும் கண்டால்'. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசனின் மாறுபட்ட வேடத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'தசவதாரம்'.
தசாவதாரம் படம்:
இந்த படத்தில் கமலஹாசன் அவர்கள் பத்து வேடத்தில் நடித்து இருப்பார். இந்த படத்தில் அசின், மல்லிகா ஷெராவத் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை தந்தது. இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற 'கல்லை மட்டும் கண்டால்' பாடல் இன்னும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இந்த பாடலின் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
https://www.youtube.com/watch?v=0GKHPbAhBmc
தசாவதாரம் பாடல்:
தசாவதாரம் படத்தில் இடம் பெற்ற ,கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’ என்ற பாடலில்
ராஜலட்சுமி நாயகன், ஸ்ரீனிவாசன் தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான் எனும் வரிகள் இடம்பெற்றிருக்கும். அதில் கமலஹாசன் உடைய தாய், தந்தையை குறிக்கும். கமலஹாசனின் அம்மா பெயர் ராஜலட்சுமி. அப்பா பெயர் ஸ்ரீனிவாசன், சீனிவாசனின் சேய் விஷ்ணுதாசன்(கமல்ஹாசன்) குறிக்கும்.
'நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜன் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்' என்ற வரிகள் இடம் பெற்று இருக்கும். இதில் ராஜா என்று யாரைக் குறிக்கிறார் என்று சொல்லவே தேவையில்லை. இளையராஜாவை தான் குறிப்பிட்டிருக்கிறார். பின் ரங்கராஜன் என்பது வாலியின் உண்மையான பெயர். இந்த இடத்தில் வாலி தன்னை ஒரு கவிஞர் என்று நிருபித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.