படத்தின் டைட்டில் பார்த்து பயப்படாதீங்க - 'கிஸ்' பட விழாவில் நடிகர் கவின் சொன்ன சுவாரசிய தகவல்

By subhashini · 18/9/2025

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து வருகிறார். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பிறகு தன்னுடைய நண்பர்களின் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பின் இவர் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்து இருந்தார். பின்பு 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் கவின் நுழைந்தார்.

அதன் பின் இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படம் மூலம் கதாநாயகனாக சினிமாவில் தடம் பதித்தார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த லிப்ட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து கவின் நடித்த டாடா, ஸ்டார் போன்ற படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது.

கிஸ் படம்:

மேலும், கவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிளடி பெக்கர் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது நடிகர் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கிஸ். இந்த படத்தை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அயோத்தி புகழ் பிரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். இந்த படம் செப்டம்பர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

கவின் பேட்டி:

இந்நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று இருந்தது. அதில் பேசிய நடிகர் கவின், இது என்னுடைய ஆறாவது படம். இந்த மீட்டிங்கில் நான் எல்லோருக்குமே நன்றி சொல்லணும் என்று நினைக்கிறேன். அதில் முதல் ஆள் உதவி இயக்குனர் விஷால். இந்த படம் பற்றி பேச தொடங்க நாளில் இருந்து இப்போது வரை உழைத்துக் கொண்டே இருந்தார். விஷால் நினைத்திருந்தால் வேற ஒரு இடத்துக்கு போயிருக்க முடியும். டெக்னீசியன் டீம் தூங்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=PnB-baREnW0

படம் பற்றி சொன்னது:

அனிருத் சாருக்கும், பாடல் எழுதிய விக்னேஷ் சிவன் சாருக்கும் நன்றி. மிஸ்கின்சார் டைட்டில் கொடுத்திருக்கிறார். விஜய் சேதுபதி அண்ணா வாய்ஸ் ஓவர் கொடுத்து இருக்கிறார். ப்ரீத்தி இதில் டோட்டலாக வேற மாதிரி இருப்பார். அவங்க ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். இந்த படத்தோட டைட்டில் பார்த்ததும் ஒரு மாதிரி ஜாலியான படம் என்று தோணும். ஆனால், உண்மையிலேயே இது குடும்பத்தோடு எல்லோரும் ஜாலியாக பார்க்கிற படமாக தான் இருக்கும். ஒரு படம் ஜெயிப்பது என்பது குடும்பத்தோட வந்து பார்ப்பது தான் என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full