கவின் நடித்த கிஸ் படம் ஒர்க்கவுட் ஆனதா? இல்லையா? படம் எப்படி இருக்கு - முழு விமர்சனம் இதோ

By subhashini · 19/9/2025

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கிஸ். இந்த படத்தை நடன இயக்குனர் சதீஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, விடிவி கணேஷ், மிர்ச்சி விஜய், பிரபு, விஜய் டிவி சக்தி, தேவயானி, ராவ் ரமேஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசை அமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஹீரோயின் ப்ரீத்தி மூலம் ஹீரோ கவினுக்கு ஒரு புத்தகம் கிடைக்கிறது. அந்த புத்தகம் அவருடைய கைக்கு வந்த பிறகு தான் காதலர்கள் முத்தம் கொடுத்துக் கொண்டாலே அவர்களுடைய எதிர்காலம் கவினுக்கு தெரிகிறது. ஏற்கனவே கவின் காதல் என்றாலே கடுப்பாக இருக்கிறார். இந்த சக்தியை வைத்து கவின் காதலர்களை பிரித்துக் கொண்டு இருக்கிறார். அதோடு தான் யாரையும் காதலிக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் கவின், ஹீரோயின் பிரீத்தியை காதலிக்க துவங்கினார். தன்னுடைய காதலை கவினுக்கு உணர வைக்க ப்ரீத்தி முத்தம் ஒன்று கொடுக்கிறார். அப்போது ப்ரீத்தி விரைவில் இறந்து போவது போல கவினுக்கு தெரிகிறது. தன்னுடைய காதலை பிரீத்தியிடம் சொன்னதால் தான் அவள் இறந்து போவாள் என்று கவினுக்கு தெரிய வருகிறது. அதற்குப்பின் என்ன நடக்கிறது? அந்த புத்தகத்திற்கும் கவினுக்கும் என்ன சம்மந்தம்? ப்ரீத்திக்கு என்ன ஆனது? ப்ரீத்தி- கவின் இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.

நடனத்தில் தூள் கிளப்பிக் கொண்டிருந்த சதீஷ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே இவர் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இந்த படத்தினுடைய கதைகளம் நன்றாக இருக்கிறது. முதல் பாதி பொறுமையாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. குறிப்பாக, நகைச்சுவை காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ் காமெடிகள் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இவர்களுடைய ரோல் படத்திற்கு பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். படத்தில் வரும் காதல் காட்சிகள், பேண்டஸி விஷயங்கள் எல்லாமே பெரிதாக கனெக்ட் ஆகும்படி இல்லை. காதல் என்றாலே பிடிக்காது என்ற ரோலில் கவின் நடித்திருக்கிறார். அதற்குப்பின் அவருக்கு கிடைத்த காதல் புத்தகத்தை வைத்து அவருடைய வாழ்க்கையில் நடக்கும் கதையைத்தான் இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார்.

கவின் தனக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கிறார். அவரை அடுத்து ஹீரோயினியுமே சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், கதாபாத்திரங்களை ஃபேண்டஸி விஷயங்கள் மூலம் இயக்குனர் கொண்டு சென்றிருப்பது தான் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக கிளைமாக்ஸ் கொஞ்சம் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது.

நிறை:

கவின்,ப்ரீத்தி நடிப்பு

மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ் நகைச்சுவை காட்சிகள் நன்றாக இருக்கிறது

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்

கதைக்களம் ஓகே

இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது

குறை:

முதல் பாதி சுவாரசியமே இல்லை

கிளைமாக்ஸ் சொதப்பல்

எமோஷன் காட்சிகள் சில இடங்களில் கனெக்ட் ஆகவே இல்லை

ஆங்காங்கே லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் கிஸ் படம் - விறுவிறுப்பு குறைவு

Tamil Behind Talkies AMP · Quick view
View full