200 படங்களில் கிடைக்காத புகழ் இந்த சீரிஸ்ல கிடைச்சது - நடிகர் கவிதாலயா கிருஷ்ணன் எஸ்குளூசிவ்
தற்போது சோசியல் மீடியா முழுவதும் ட்ரெண்டிங்காக சென்றிருக்கும் வெப் சீரிஸ் ஹார்ட் பீட். இந்த வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த வெப் தொடரில் கணேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் கவிதாலயா கிருஷ்ணன். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கவிதாலயா கிருஷ்ணன், இந்த சீரிஸில் நடிக்க சொன்னப்ப எனக்கு பெரிதாக ஆர்வம் இல்லை.
அந்த நேரத்தில் நான் கொஞ்சம் பிஸியாக இருந்தேன். இயக்குனர் தீபக் சுந்தர்ராஜனும் எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர் ஷாம் ரெண்டு பேரும் என்னை மீட் பண்ண வந்தார்கள். இந்த சீரிஸோட ஓன்லைன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆரம்பத்தில் இந்த அளவுக்கு ரீச் ஆகும் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. நான் கிட்டத்தட்ட 85 ஆயிரம் அவர் டெலிவிஷனில் பண்ணியிருக்கிறேன். 200 படங்கள் பண்ணிட்டேன். 2500 நாடகங்கள் பண்ணி இருக்கிறேன். இந்த அளவுக்கு ரீச் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
நடிகர் கவிதாலயா கிருஷ்ணன் பேட்டி:
கடைசி எபிசோடு பார்த்துவிட்டு நிறைய போன் கால் வந்தது. 200 படங்களில் கிடைக்காத புகழ் இந்த சீரிஸில் எனக்கு கிடைத்திருக்கிறது. எனக்கு பெருசாக நடிக்க தெரியாது. இயல்பாக தான் கேரக்டரில் இருப்பேன். அதே மாதிரி ஸ்கிரிப்டில் உள்ள டயலாக்கை அப்படியே பேசமாட்டேன். ஸ்கிரிப்டில் என்ன இருக்கிறது என்று புரிந்து கொண்டு நான் ஆகத்தான் பேசுவேன். அதற்கு எனக்கு ஸ்பேஸ் கொடுத்தார்கள். எனக்கு சுதந்திரம் கிடைத்தது. எனக்கு தீபாவை ரொம்ப பிடிக்கும். என் மூத்த பொண்ணுக்கும் அவளுக்கும் ஒரு நிறைய ஒற்றுமை இருக்கு.
https://www.youtube.com/watch?v=0xCUcPVAh-c
எப்பவும் அவங்க கிட்ட, நீ ரொம்ப திறமைசாலிமா. நல்ல கதை தேர்ந்தெடுத்து நடிக்கணும் என்று சொல்வேன். எதார்த்தமாக ரொம்ப அருமையாக நடிப்பார். நானும் மோகன் ராமனும் நிஜத்தில் நல்ல நண்பர்கள். அவன் கூட நடிக்கும் போது மட்டும் தான் கேசுவலாக பேசுவேன். மத்த சீன் எல்லாம் இப்படித்தான் என்று என் கேரக்டருக்கு நானே டிசைன் பண்ணிக் கொண்டேன். இப்போது சீரிஸில் என்னுடைய மனைவி இறந்துட்டாங்க. அதனால் நான் ரொம்ப எமோஷனல் ஆகி உடைந்து விட்டேன். அந்த சீனை ரொம்ப அழகாக எடுத்திருந்தார்கள்.
தீபா-அனுமோல் பற்றி சொன்னது:
என் மனைவியாக நடித்திருந்தவர்களும் நல்லா நடித்திருந்தார்கள். திடீரென்று அவர்கள் இறந்திடுவாங்க என்று சொன்னார்கள். ஆனால், அவங்க அதை ரொம்ப எதார்த்தமாக எடுத்துக் கொண்டார்கள். கிளிசரின் எல்லாம் போட்டு எனக்கு நடிக்க தெரியாது. அந்த சீனில் நான் அழுதேன். எப்பவுமே ஒருத்தன் ரியாக்ட் பண்ணா மட்டும்தான் நாம ஆக்ட் பண்ண முடியும். தீபா பாலு, அனுமோல் கூட நடிக்கும் போது பயமாக இருக்கும். அவங்க கேஷுவலாக நடித்து போய்விடுவார்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.