கீர்த்தி ரோல்ல தான் நடிக்க சொன்னாங்க, ஆனால் - டிராகன் பட அனுபவத்தை பகிர்ந்த கயாடு லோஹர்

By subhashini · 14/3/2025

டிராகன் பட நடிகை கயாடு லோஹர் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக ரசிகர்களின் சென்சேஷனல் நடிகையாக கயாடு லோஹர் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் அசாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் கன்னடத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் மூலம் தான் நடிகை ஆனார். அதை அடுத்து இவர் மலையாளத்தில் வெளியான 19 ஆம் நூற்றாண்டு என்ற படத்தில் நங்கேலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதற்கு பிறகு இவர் தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் தற்போது இவர் தமிழில் டிராகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் தான் ட்ராகன். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

ட்ராகன் படம்:

இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து முதல் முதலாக ‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து இவர் ட்ராகன் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இந்த படம் 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கயாடு லோஹர் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மதியம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் கயாடு லோஹர். முதல் படமே இவருக்கு மிக பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. இதை அடுத்து இவர் அதர்வாவின் நடிப்பில் உருவாகி வரும் இதயம் முரளி படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து இன்னும் சில படங்களில் கயாடு கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் டிராகன் படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கயாடு லோஹர் அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

கயாடு லோஹர் பதிவு:

அதில் அவர், என்னுடைய வாழ்க்கையை மாற்றிய படம் டிராகன். அஸ்வத் மாரிமுத்துவுக்கு நன்றி. பல்லவி கதாபாத்திரத்தின் மூலம் என்னை தமிழ் சினிமா உலகில் அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி.
நீங்கள் முதலில் எனக்கு சொன்ன கதாபாத்திரம் கீர்த்தி தான் .நானும் நடிக்க ஆர்வமாக இருந்தேன். பின் உங்களிடம் இருந்து எந்தவித அழைப்புமே வராததால் நான் படத்தில் இல்லை என்று நினைத்துக் கொண்டேன். அதற்குப் பின் தான் நீங்கள் ஒரு நாள் திடீரென இந்த படத்தின் கதையை சொல்லி பல்லவி கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தீர்கள்.

View this post on Instagram

A post shared by kayadulohar (@kayadu_lohar_official)

நன்றி சொன்ன கயாடு:

எனக்கு இரண்டு கதாநாயகிகள் இருக்கும் படம் என்பதால் ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால், என்னுடைய தயக்கத்தை புரிந்து கொண்ட நீங்கள், இந்த படம் மூலம் உங்களுடைய சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தீர்கள். அதேபோல் இந்த படத்தின் மூலம் எனக்கு தமிழில் மிகப் பெரிய அறிமுகத்தை கொடுத்திருக்கிறது. நான் ரொம்ப நன்றி கடன்பட்டு உள்ளேன். வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றி சொல்லுவேன். அதேபோல் பிரதீப் ரங்கநாதன் படப்பிடிப்பு தளத்தில் அதிகமாக பேசவில்லை. இருந்தாலுமே, சினிமாவில் நீங்கள் கற்றுக் கொண்ட விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். ஐரோப்பாவில் உங்களுடன் இருந்த நாட்கள் மறக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full