சோசியல் மீடியாவில் இருந்து திடீரென விலகிய கயாடு லோஹர் - என்ன ஆச்சு தெரியுமா?

சோசியல் மீடியாவில் இருந்து திடீரென விலகிய கயாடு லோஹர் - என்ன ஆச்சு தெரியுமா?

By subhashini · 22/6/2026

சமீப காலமாக ரசிகர்களின் சென்சேஷனல் நடிகையாக கயாடு லோஹர் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் அசாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் கன்னடத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் மூலம் தான் நடிகை ஆனார். அதை அடுத்து இவர் மலையாளத்தில் வெளியான 19 ஆம் நூற்றாண்டு என்ற படத்தில் நங்கேலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதற்கு பிறகு இவர் தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.

அந்த வகையில் இவர் டிராகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த படம் தான் ட்ராகன். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து இவர் அதர்வாவின் நடிப்பில் உருவாகி வரும் இதயம் முரளி படத்தில் நடித்து இருக்கிறார்.

கயாடு குறித்த தகவல்:

தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இவர் இம்மார்ட்டல் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பின் இவர் மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படத்திலும் நடிக்கிறார். இது தவிர இவர் மலையாளம், தெலுங்கு என பிறமொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களாகவே சோசியல் மீடியாவில் கயாடு குறித்து தேவையில்லாத அவதூறுகள் விமர்சனங்கள் பரவி வந்து கொண்டிருக்கின்றது.

கயாடு பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கயாடு, நான் சில காலம் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். சில சமயங்களில் நாம் நம் உடலுக்கு கொடுக்கும் அதே அளவு ஓய்வை நம் மனதிற்கும் கொடுக்க வேண்டும். திரைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையும் என்னையும் முழுமையாக உணர அதிக நேரம் தேவைப்பட வேண்டி இருக்கிறது. இதை நான் உணர்கிறேன். இங்கு எனக்கு ஆதரவளித்த, என்னை ஊக்கப்படுத்திய மற்றும் அன்பை பகிர்ந்த அனைவருக்குமே நன்றி.

மீடியா விலகல்:

உங்களுடைய செய்திகளும் அன்பும் நீங்கள் நினைப்பது விட எனக்கு ரொம்பவே மதிப்புக்குரியது. நான் சில காலம் சமூக ஊடகங்கள் இருந்து விலகி இருப்பேன். ஆனால், முக்கியமான அறிவிப்புகள் எதுவும் இருந்தால் அதை என்னுடைய குழுவினர் மூலமாக பகிர்வேன். அனைவருக்கும் அமைதி மகிழ்ச்சி அன்பு கிடைக்க வாழ்த்துகிறேன் விரைவில் சந்திப்போம் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full