லைவில் தனுஷ் பெயர், மேடையில் விஜய் பெயர் - என்ன கயாடு இதெல்லாம்? நீங்களே பாருங்க
பொது வெளியில் ட்ராகன் பட நடிகை கயாடு சொல்லி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கடந்த சில வாரங்களாக ரசிகர்களின் சென்சேஷனல் நடிகையாக கயாடு லோஹர் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் அசாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் கன்னடத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் மூலம்தான் நடிகை ஆனார். அதை அடுத்து இவர் மலையாளத்தில் வெளியான 19 ஆம் நூற்றாண்டு என்ற படத்தில் நங்கேலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதற்கு பிறகு இவர் தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் தமிழில் டிராகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் தான் ட்ராகன். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
ட்ராகன் படம்:
இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து முதல் முதலாக ‘ஓ மை கடவுளே’ என்கிற திரைப்படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இவர் ட்ராகன் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இந்த படம் 120 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கயாடு லோஹர் குறித்த தகவல்:
மேலும், இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மதியம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் கயாடு லோஹர். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. இதை அடுத்து இவர் அதர்வாவின் நடிப்பில் உருவாகி வரும் இதயம் முரளி படத்தில் நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸின் ஆகாஷ் பாஸ்கரன் தான் இந்த படத்தை தயாரித்தும், இயக்கியும் வருகிறார். இதில் பிரக்யா நாக்ரா, ரக்ஷன், பரிதாபங்கள் சுதாகர், ராபர்ட், ஏஞ்சலினா, ப்ரீத்தி முகுந்தன் என பலர் நடிக்கின்றனர்.
கயாடு செய்த வேலை:
அதோடு இந்த படத்தில் தமன் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் நடித்து இருக்கிறார். இதை அடுத்து இன்னும் சில படங்களில் கயாடு கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த கல்லூரி விழாவில் கயாடு லோஹர் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் உங்களுடைய செலிபிரிட்டி கிரஸ் யார்? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு கயாடு லோஹர், தளபதி விஜய் தான் என்னுடைய கிரஸ்.
https://www.youtube.com/shorts/g--hEukExmo
நெட்டிசன்கள் ட்ரோல்:
அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அவர் நடித்ததிலேயே எனக்கு பிடித்த படம் தெறி தான் என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடிய போது உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்? என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு கயாடு லோஹர், தனுஷ் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் வேறு யாருக்குமே இடமில்லை என்று கூறியிருக்கிறார். தற்போது இதை கவனித்த நெட்டிசன்கள், கயாடு லோஹர் மாற்றி மாற்றி பேசுகிறார். எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்று ட்ரோல் செய்து வருகிறார்கள்.