கயல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பளம் விவரம் - இருக்கறதுலயே அதிகம் இவருக்கு தானா.

By subhashini · 17/7/2023

கயல் சீரியலில் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் சன் ஒளிபரப்பாகி ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதிலும் சன் டிவியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் கயல். தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், சீரியலில் கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார்.

கயல் சீரியல்:

கயல் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை சுற்றியும் மற்றும் அவரை காதலிக்கும் சஞ்சீவ் சுற்றியும் தான் சீரியல் செல்கிறது. தற்போது சீரியலில் எழிலின் அம்மா கயலை பழிவாங்க திட்டம் தீட்டுகிறார். இதனால் கயல் குடும்பமே பரிதவித்து நிற்கிறது. கடைசியில் எழில் கயலுக்கு உதவி செய்கிறார். இதனால் எழிலின் அம்மாவின் முகத்திரையை கயல் கிழிக்கிறார். பின் எழிலை திருமணம் செய்து கொள்ள கயல் சம்மதிக்கிறார்.

சீரியலின் கதை:

இனி எழில், கயலை திருமணம் செய்து கொண்டாரா? கயலின் பெரியப்பா எண்ணம் நிறைவேறியதா? எழிலின் அம்மா என்ன செய்வார்? போன்ற அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியலில் கயல் கதாபாத்திரத்தில் சைத்ரா ரெட்டி நடிக்கிறார். எழில் கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடிக்கிறார். மேலும், சன் டிவி சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் தான் முன்னிலையில் இருக்கிறது.

சீரியல் குறித்த தகவல்:

இதுவரை இந்த சீரியல் 530 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. தற்போது கதாநாயகன், கதாநாயகியின் திருமண காட்சிகள் சென்று கொண்டிருப்பதால் சீரியல் பரபரப்பாக இருக்கின்றது. இந்த நிலையில் கயல் சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சம்பளம் குறித்த பட்டியல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. ஒரு நாளைக்கு இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் வாங்கும் சம்பளம்,

சம்பளம் விவரம்:

சைத்ரா ரெட்டி- ரூ. 25 ஆயிரம் வாங்குகிறார்.
சஞ்சீவ்- ரூ. 15 முதல் 20 ஆயிரம் வாங்குகிறார்.
தேவி- ரூ. 6 முதல் 8 ஆயிரம் வாங்குகிறார்.
விக்னேஷ்- ரூ. 12 முதல் 14 ஆயிரம் வாங்குகிறார்.
காமாட்சி- ரூ. 10 முதல் 12 ஆயிரம் வாங்குகிறார்.
மற்ற நடிகர்கள்- ரூ. 10 ஆயிரத்திற்கு கீழ் வாங்குகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full