சினிமா வில்லிகளை மிஞ்சும் அளவுக்கு கயல் சீரியல் வில்லி செய்த வேலை-வெளியான அதிரடி ப்ரோமோ
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் டாப்பில் இருப்பது கயல். தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டு கயல் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல், தன்னுடைய மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக சீரியலில் எழிலின் திருமண ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. எழில் சிறு வயதில் இருந்தே கயலை காதலித்து வருகிறார்.
கயல், எழிலை நண்பராக தான் பார்த்தார். பின் எப்படியோ எழில், தன்னுடைய காதலை கயலிடம் சொன்னார். ஆனால், கயல் குடும்ப சூழ்நிலைக்காக எழிலை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்தார். பின்பு ஒரு கட்டத்தில் கயலுக்கு எழில் மீது காதல் ஏற்படுகின்றது. இருந்தாலும், கயல் அதை சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் எழிலுக்கு ஆர்த்தியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால், அந்த திருமணத்தில் எழிலுக்கு விருப்பம் இல்லை.
கயல் சீரியல்:
கடைசியில் அந்த திருமணம் நின்றது. மேலும், ஆர்த்திக்கு எழிலின் நண்பர் ஆனந்த் தாலி காட்டி விட்டார். பின் எழிலை காதலிப்பதை கயல் ஒத்துக் கொண்டார். இருவருமே காதலிக்க தொடங்கினார்கள். ஆனால், எழிலின் அம்மாவிற்கு கயலை பிடிக்கவில்லை. இருந்தாலுமே, எழில், கயலை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார். பின் கயல்- எழில் திருமண வேலைகளும் சிறப்பாக கோலாகலமாக நடந்தது.
கயல்- எழில் திருமணம் :
அப்போது கயலின் அம்மாவிற்கு விஷம் கொடுத்ததால் திருமணம் தடைபட்டது. அதற்கு பின் கயல் உடைய அம்மா குணமாகி வந்துவிட்டார். இருந்தாலுமே கயல்- எழில் இருவரும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது மீண்டும் கயல் - எழில் திருமணத்தின் உடைய ட்ராக் தான் சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் ராஜலட்சுமியும், அவருடைய மகன் எல்லோருமே மூர்த்தியை ரொம்ப அவமானமாக பேசி இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
இருந்தாலுமே மூர்த்தி பொறுமையாக தான் இருந்தார். கல்யாண வேலைகள் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது. எப்படியாவது கயலை பழிவாங்க வேண்டும் என்று கௌதம் காத்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் திருமணத்தை நிறுத்த கயல் பெரியப்பா, பெரியம்மா போராடுகிறார்கள். இவர்களுடன் புது வில்லியாக தீபிகா சேர்ந்து இருக்கிறார். நேற்று எபிசோடில் மூர்த்தி, அவரின் பெரியப்பா- பெரியம்மா செய்த சதி வேலையை கண்டுபித்து விடுகிறார். ஆனால், இதை யாரிடமும் சொல்லாமல் மூர்த்தி மறைக்க பார்க்கிறார். இருந்தாலும், கயல் கண்டுபிடித்து விடுகிறார்.
https://youtu.be/Pm6WBAs4YsI?si=QJgzVxjPsD78IvNn
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோடில், புது வில்லி தீபிகா, கயலுக்கு எதிராக சதி வேலைகளை செய்கிறார். அந்த வரிசையில் அவர் கயல் துணியில் கெமிக்கல் ஊத்தி அவரை கொல்ல பார்க்கிறார். ஆனால், எப்படியோ கயல் தப்பித்து விடுகிறார். சினிமா வில்லியை மிஞ்சும் அளவுக்கு புதுசு புதுசா தீபிகா பிளான் போடுகிறார். ஆனால், இதை கயலின் தங்கை தெரிந்து கொண்டு கோபப்பட்டு பேசுகிறார். பின் இதை எல்லோரிடம் சொல்ல பார்க்கிறார். இனி கயல் திருமணம் நடக்குமா? தீபிகாவின் சதிவலையிலிருந்து கயல் தப்பிப்பாரா? இந்த உண்மையை கயல் தங்கை எல்லோருக்கும் சொல்வாரா? போன்ற பரபரப்பில் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.