ஆர்த்தி கழுத்தில் தாலி ஏறியது, எழில் தப்பித்தாரா? பரபரப்பின் உச்சத்தில் கயல் சீரியல்

By subhashini · 17/8/2023

கயல் சீரியலில் எழில் திருமணம் குறித்து யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் குறித்த பிரமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில மாதங்களாக கயல் சீரியல் குறித்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் கயல். தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டு கயல் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

மேலும், சீரியலில் கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார். கயல் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை சுற்றியும் மற்றும் அவரை காதலிக்கும் சஞ்சீவ் சுற்றியும் தான் சீரியல் செல்கிறது. கயல் ரோலில் சைத்ராவும், எழில் ரோலில் சஞ்சீவ் நடிக்கிறார்கள். அதோடு சன் டிவி சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் தான் முன்னிலையில் இருக்கிறது.

கயல் சீரியல்:

அதுவும் கடந்த சில மாதங்களாக கயல் சீரியலில் எழிலின் திருமண ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. எழில் சிறு வயதில் இருந்தே கயலை காதலித்து வருகிறார். கயல் எழிலை நண்பராக தான் பார்க்கிறார். பின் எப்படியோ எழில் தன்னுடைய காதலை கயலிடம் சொல்கிறார். ஆனால், கயல் குடும்ப சூழ்நிலைக்காக எழிலை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்கிறார். பின்பு ஒரு கட்டத்தில் கயலுக்கு எழில் மீது காதல் ஏற்படுகின்றது. கயல் அதை சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

சீரியலின் கதை:

பின் பலரும் எதிர்பார்த்த எழிலின் திருமணம் தான் கடந்த இரண்டு வாரமாக சென்று கொண்டிருக்கின்றது. எழில் ஆர்த்தியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கின்றார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. எழில் மணக்கோளத்தில் இருக்கிறார். ஐயர் மந்திரம் ஓதி, தாலியை எழில் கையில் கொடுக்கிறார். எழில் தாலியை கையில் எடுத்துக்கொண்டு ஆர்த்தி கழுத்தில் கட்டுவது போல் செல்கின்றார். ஆனால், திடீரென்று தாலியை கயல் கழுத்தில் கட்டி விட்டார். இது பலருக்கும் சந்தோசத்தை கொடுத்தது.

சீரியல் குறித்த ப்ரோமோ:

பின் வழக்கம் போல் எழில்-கயல் திருமணத்தை கனவு என்று முடித்து விட்டார்கள். தற்போது எழில்- ஆர்த்தியை திருமணம் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பில் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் எழிலின் தந்தை, கயலின் பெரியப்பா தர்மலிங்கத்திடம் பிரச்சனை செய்வது போல காண்பித்து இருக்கிறார்கள். பின் ஆர்த்தி தன்னை மறந்து மணமேடையில் உட்கார்ந்து இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=K0DmEDfH5u4&t=26s

திருமணத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் :

ஆர்த்திக்கு நிஜமாகவே திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் அவருடைய கழுத்தில் எழில் தாலி கட்டவில்லை. எழிலின் நண்பர் ஆனந்த் தாலி காட்டியுள்ளார். பின் மணமேடையில் பார்க்கும்போது ஆர்த்தி, கயல், கயலின் பெரியப்பா குடும்பத்தார்,மற்றும் எழிலின் குடும்பம் என பலருமே அதிர்ச்சியாக நிற்கிறார்கள். ஆக மொத்தம் எழிலுக்கு மட்டும் இந்த திருமணத்தில் சந்தோஷம். இதை அடுத்து எழில்- கயல் திருமணம் நடக்குமா? இதனால் என்னவெல்லாம் கலவரம் நடக்கப் போவது? என்ற பரபரப்பில் சீரியல் செல்ல இருக்கின்றது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full