மாமியார் வீட்டுக்கு போனாளே பெண்கள் நிலைமை இது தான் - ஆதங்கத்தில் கீர்த்தி சுரேஷ் சொன்னது

By subhashini · 3/1/2025

இந்தியாவில் திருமணம் ஆன பெண்களுடைய வாழ்க்கை பற்றி கீர்த்தி சுரேஷ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்தார். தற்போது இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் வெளியான ‘பேபி ஜான்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தமிழில் வெளியான ‘தெறி ‘படத்தின் ரீமேக் ஆகும். வருண் தவான் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை இயக்குனர் அட்லி தயாரித்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் பற்றி தகவல்:

பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் திருமணம் ஆன பெண்கள் தொடர்பான கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பது, ஒரு பெண் திருமணம் முடிந்து இன்னொரு வீட்டுக்கு சென்று வாழ்ந்தால் அவள் மேல் கொண்டு படிக்க கூடாதா? பெண்களுடைய வாழ்க்கையில் கல்யாணம் கட்டாயம் நடந்து விடும். அதற்குப் பிறகு என்ன என்றெல்லாம் சொல்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் பேட்டி:

அதற்கு திருமணத்திற்கு பிறகு அந்தப் பெண்ணுக்கு பெரிதாக வாழ்க்கை கிடையாது என்று அர்த்தம். இது சமூகமாக சேர்ந்து உருவாக்கப்பட்ட விஷயம் தான். கலாச்சாரம் என்ற பெயரில் உருவான ஒன்று. இது தனிப்பட்ட நபர்களுடைய முடிவை பொருத்தது. கல்யாணம் என்பது இந்த வயதில்தான் செய்து கொள்ள வேண்டும் என்று வரைமுறை எல்லாம் கிடையாது. 40, 50, 60-ல் கூட திருமணம் செய்து கொள்ளலாம். ஒருவேளை கல்யாணம் செய்து கொள்ளாமல் கூட வாழலாம். அது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது.

பெண்கள் வாழ்க்கை:

அதேபோல் காலையில் தாமதமாக சில பெண்கள் எழுவார்கள். அதற்கு, இங்கேயே இப்படி தூங்கினால் மாமியார் வீட்டுக்கு சென்றால் எப்படி காலையில் எழுந்து வேலைகளை செய்வாய் என்று சொல்வார்கள். காரணம், மாமியார் வீட்டுக்கு சென்றாலே காலையில் இருந்து எல்லா வேலைகளையும் பெண்கள் தான் கவனித்துக் கொள்வார்களாம். அதற்காக அந்த வேலைகள் எல்லாம் ஆண்களும் கவனிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

கீர்த்தி சுரேஷ் திருமணம் :

அவர்கள் ஒரு பணியாளை வைத்துவிட்டு வேலை செய்யலாம் என்பது தான் என்னுடைய கருத்து என்று கூறியிருக்கிறார். மேலும், நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட நாள் காதலர் ஆண்டனிக்கும் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரபல நடிகர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். ஆண்டனி துபாயை சேர்ந்தவர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full