நான் கார் ரேஸர் ஆகணும்தான் ஆசைப்பட்டேன், ஆனா - பட விழாவில் கீர்த்தி பாண்டியன் எமோஷனல்

By subhashini · 17/6/2025

தன்னுடைய ஆசை குறித்து முதன் முதலாக நடிகை கீர்த்தி பாண்டியன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் கீர்த்தி பாண்டியன். இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவார். கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இதனை அடுத்து இவர் அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்தார்.

இதை அடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த கண்ணகி படத்தில் கீர்த்தி நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து கீர்த்தி பாண்டியன் அவர்கள் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை எஸ் ஜெயக்குமார் இயக்கி இருந்தார். இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடுக்ஷன் நிறுவனம் தான் தயாரித்தது. இந்த படத்தில் சாந்தனு, அசோக் செல்வன் உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.

கீர்த்தி பாண்டியன் குறித்த தகவல்:

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இதை அடுத்து கொஞ்சம் பேசினால் என்ன என்ற படத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்திருந்தார். இந்த படம் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதற்கிடையில் ப்ளூ ஸ்டார் படத்தின் சூட்டிங் போதுதான் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்ந்தது. இதை அடுத்து இவர்களுடைய காதலை சோசியல் மீடியாவில் அறிவித்தார்கள்.

கீர்த்தி பாண்டியன் திருமணம்:

பின் இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்கள். கடந்த ஆண்டுதான் இவர்களுடைய திருமணம் நடைபெற்று இருந்தது. திருமணத்திற்கு பிறகு இருவருமே தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கீர்த்தி பாண்டியன் அவர்கள் அஃகேனம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன் தந்தையும் நடிகருமான அருண்பாண்டியன் நடித்திருக்கிறார்.

கீர்த்தி பாண்டியன் சொன்னது:

இந்த படத்தைக் கே.உதய் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் பிரவீன் ராஜா, ரமேஷ் திலக், ஆதித்யா மேனன், சீதா,எம். சுந்தர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஜூலை நான்காம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் பேசிய கீர்த்தி பாண்டியன், இந்த படத்தினுடைய இயக்குனர் இந்த கதையை நான்கு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னார். அப்போது அவர் யாக்கை திரி என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். அதை பார்த்தவுடன் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஓகே சொல்லிவிட்டேன்.

https://www.youtube.com/watch?v=HUD3UwISXmw

கீர்த்தி பாண்டியன் ஆசை:

என்னுடைய அப்பா திரைப்படக் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து எவ்வளவு ஆர்வமாக வேலை செய்திருப்பாரோ அதே போல் இந்த படத்தில் வேலை செய்து இருக்கிறார். இந்த படத்தினுடைய கதை அவருடைய பெயரில் தான் இருக்கும். இந்த படத்தை பெண்களை மையப்படுத்திய கதை என்று சொல்ல வேண்டாம். இந்த படத்தில் வேறு சில விஷயங்களும் செய்திருக்கிறோம். இந்த படத்தில் நான் இந்திரா எனும் கதாபாத்திரத்தில் கேப் ஓட்டுனராக நடித்திருக்கிறேன். எனக்கு டிரைவிங் என்றால் ரொம்ப பிடிக்கும். நான் நடிக்கவில்லை என்றால் கண்டிப்பாக கார் ரேஸ் வீராங்கனையாக தான் ஆகிருப்பேன். எனக்கு எப்போதுமே என்னுடைய தந்தை சப்போர்ட்டாக இருக்கிறார். அவர்தான் என்னுடைய ரியல் ஹீரோ என்று பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full