நான் அந்த மாதிரி எல்லாம் டிரஸ் போடவே இல்லை, ஆனால் சோசியல் மீடியாவில் - கீர்த்தி சுரேஷ் உருக்கம்
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்தார்.
தற்போது இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டில் ‘பேபி ஜான்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழில் வெளியான ‘தெறி ‘படத்தின் ரீமேக் ஆகும். பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடைசியாக தெலுங்கில் வெளிவந்த உப்பு கப்புரம்பு என்ற படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப் பெறவில்லை. இதை அடுத்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் குறித்த தகவல்:
அந்த வகையில் இவர் விஜய் தேவர் கொண்டவுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம்
ரிவால்வர் ரீட்டா. இந்த படம் இந்த மாதத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் தற்போது இந்த படத்திn
ப்ரமோஷன் பணிகளில் கீர்த்தி சுரேஷ் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கீர்த்தி சுரேஷ் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக கூறி இருந்தது, இப்போது பெரிய பிரச்சனை ஏஐ தொழில்நுட்பம் தான்.
கீர்த்தி சுரேஷ் பேட்டி:
அது நமக்கு வரமாக இருந்தாலும் சில சமயங்களில் அழிவை உருவாக்கும் விஷயமாக இருக்கிறது. தொழில்நுட்பங்கள் மனிதர்கள் கண்டுபிடித்த ஒரு விஷயம். ஆனால், அது இன்று நம்மையே மீறி எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பார்க்கும்போது நான் இந்த மாதிரி டிரஸ் போட்டிருந்தேனா? என்று என்னையே யோசிக்கிற அளவுக்கு ரியலாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு படத்தோட பூஜையில் நான் தப்பான போஸ் கொடுத்த மாதிரியான புகைப்படத்தை பார்த்தேன். நான் அப்படி எந்த ஒரு போஸும் கொடுக்கவில்லை. இது எங்க போயிட்டு இருக்குன்னு தெரியவில்லை.
https://www.youtube.com/watch?v=J_XioFbHsEg
ஏஐ தொழில்நுட்பம் பற்றி சொன்னது:
அதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்று புரியவில்லை. இது காயப்படுத்தும் விஷயமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் சமூக வலைதள பக்கங்களில் வருகிற விஷயங்களுக்கு பயம் வரும். இப்போது ஏஐ மேலே பயம் வந்திருக்கிறது. ஒவ்வொரு விஷயம் வளரும்போதும் பாதிப்புகளும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. எனக்கு ரீல்ஸ் பார்க்கிற பழக்கம் இருக்கு. அது எனக்கே என்கிட்ட பிடிக்காத ஒரு விஷயம். அது சிலவற்றை என்னுடைய கணவருக்கு அனுப்புவேன். அவர் அதை ஏஐன்னு கண்டுபிடித்து விடுவார். அதற்கு பிறகு கமெண்ட்ஸில் பார்க்கும்போதுதான் அது ஏஐ என்று எனக்கே தெரிய வரும் என்று கூறியிருக்கிறார்.