15 வருட காதல் , கைக்கூடும் கீர்த்தி சுரேஷ் திருமணம்- எங்கு, எப்போது தெரியுமா? அவரே கொடுத்த அப்டேட்

By subhashini · 29/11/2024

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது.

மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்தப் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இறுதியாக இவர் நடித்த ரகு தத்தா படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

கீர்த்தி சுரேஷ் குறித்த தகவல்:

தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லீ தயாரிக்கிறார். வருண் தவான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக வட இந்தியாவிலேயே செட்டில் ஆகி இருக்கிறார் என்று கூறப்பட்டது. அதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் காதலன்:

இப்படி இருக்கும் நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் இவருக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், இவர் காதலிப்பதாகவும் செய்திகள் பரவி வந்தது. ஆனால், அதைப்பற்றி கீர்த்தி சுரேஷ் எதையுமே வெளிப்படையாக பேசவில்லை. சமீபத்தில் இவர் ஆண்டனி தட்டில் என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆண்டனி கொச்சியை சேர்ந்தவர். தற்போது இவர் துபாயில் செட்டில் ஆகி இருக்கிறார்.

https://youtube.com/shorts/1JD6UN5rzjo?si=FDHhmuGAaCO59B-g

கீர்த்தி சுரேஷ் திருமணம்:

ஆண்டனி-கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் 15 வருட பழக்கம். சில வாரங்களாகவே இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இவர்களின் திருமணம் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி கோவாவில் நடக்க இருக்கிறது. இந்த திருமணத்தில் நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இதை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்து இருக்கிறார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் தன்னுடைய குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு வந்திருந்தார்.

https://youtube.com/shorts/qYIwY-V8KEk?si=aUQynnbqoNz6s9Y7

பேட்டியில் கீர்த்தி சுரேஷ்:

அப்போது பேட்டியில் கீர்த்தி சுரேஷ், நீண்ட நாட்களுக்கு பிறகு ஏழுமலையானை வழிபட்டது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அடுத்த மாதம் எனக்கு திருமணம். என்னுடைய திருமணம் கோவாவில் நடைபெற இருக்கிறது என்று வெட்கத்துடன் சொல்லி இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full