15 ஆண்டுகள் காத்திருந்து நாங்கள் திருமணம் செய்ய இது தான் காரணம் - நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

By subhashini · 15/10/2025

தன்னுடைய காதல் திருமணம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்தார். தற்போது இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் வெளியான ‘பேபி ஜான்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழில் வெளியான ‘தெறி ‘படத்தின் ரீமேக் ஆகும். வருண் தவான் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தை இயக்குனர் அட்லி தயாரித்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கீர்த்தி சுரேஷ் திருமணம்:

கடைசியாக தெலுங்கில் வெளிவந்த உப்பு கப்புரம்பு என்ற படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப் பெறவில்லை. இதை அடுத்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் விஜய் தேவர் கொண்டவுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் அவர்கள்
தன்னுடைய நீண்டகால காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டார்.

கீர்த்தி சுரேஷ் பேட்டி:

இவர்கள் இருவருமே 15 வருடங்களாக காதலித்து வந்திருந்தார்கள். பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டுதான் இவர்களுடைய திருமணம் கோவாவில் சிறப்பாக நடைபெற்று இருந்தது. திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி சுரேஷ் அவர்கள் தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய காதல் திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ், என்னுடைய கணவர் ஆண்டனி தட்டில் ரொம்பவே சிறப்பான மனிதர். நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே ஒருவரை வுருவர் காதலித்தோம். ஆனால், அந்த நேரத்தில் எங்களுடைய வேலைகளில் நாங்கள் கவனமாக இருந்ததால் பெரிதாக எங்களுடைய காதலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

https://www.youtube.com/watch?v=UTW7gvK-vDQ

காதல் திருமணம் பற்றி சொன்னது:

அவர் கத்தாரில் சொந்தமாக தொழில் செய்து வந்தார். இதனால் நாங்கள் ஐந்து ஆண்டுகள் பார்க்காமலேயே எங்களுடைய உறவில் இருந்தோம். இருந்தாலும் எங்களுடைய காதல் அப்படியேதான் இருந்தது. நாங்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுடைய காதலை பெற்றோர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? என்ற பயமும் எங்களுக்குள் இருந்தது. பின் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் நான் என்னுடைய காதல் விஷயத்தை பற்றி என்னுடைய அப்பாவிடம் சொன்னேன். அவர் எந்த கோபமும் படாமல் என்னுடைய காதலை ஏற்றுக் கொண்டார். பின் இருவருமே பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். என்னுடைய 15 வருட காதல் வாழ்க்கையில் பல தடைகளை சந்தித்து இருக்கிறோம் என்று நெகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full