நீண்ட வருட காதலனையே கரம் பிடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்- மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

By subhashini · 19/11/2024

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக கீதிகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த பைலட்ஸ் என்ற மலையாள மொழி படத்தின் மூலம் தான் குழந்தை நட்சத்திரமாக கீர்த்தி சுரேஷ் அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் திரைப்பயணம்:

மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் குறித்த தகவல்:

அந்த வகையில் இறுதியாக இவர் நடித்த ரகு தத்தா படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லீ தயாரிக்கிறார். வருண் தவான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனால் சமீப காலமாக வட இந்தியாவிலேயே செட்டில் ஆகி இருக்கிறார் என்று கூறப்பட்டது. அதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் திருமணம்:

இப்படி இருக்கும் நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தற்போது கீர்த்தி சுரேஷ் 32 வயதாகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் இவருக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், இவர் காதலிப்பதாகவும் செய்திகள் பரவி வந்தது. ஆனால், அதைப்பற்றி கீர்த்தி சுரேஷ் எதையுமே வெளிப்படையாக பேசவில்லை. இப்படி இருக்கும் நிலையில் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி கோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் காதலன்:

இவர் ஆண்டனி தட்டில் என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார். இவர் கொச்சியை சேர்ந்தவர். தற்போது துபாயில் செட்டில் ஆகி இருக்கிறார். ஆண்டனி-கீர்த்தி இருவருக்கும் 15 வருட பழக்கம். தற்போது கீர்த்தி சுரேஷ்-ஆண்டனி சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும், இந்த திருமணத்தில் நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full