கீர்த்தி சுரேஷ் உங்களுக்கு என்ன சொந்தம் - விஜய் நண்பர் சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி விளக்கம்.

By Rajkumar · 18/11/2020

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். தனது அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=RFQcJuvpXVY&feature=emb_title

அதிலும் கீர்த்திசுரேஷ் தெலுங்கில் நடித்த மகாநதி திரைப்படம் கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது அதைத்தொடர்ந்து அம்மணியின் புகழ் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடிப்பதாக இருந்த படம் கைநழுவி போனது. அதற்கு முக்கிய காரணமே அம்மணி கஉடல் மிகவும் ஒல்லியாக ஆனதால் தான் என்று கூறப்பட்டது. இருப்பினும் பாலிவுட்டில் இன்னொரு படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் தீபாவளி கொண்டாடிய சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு இருந்தார். அதில் விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் குடும்பத்துடன் கொண்டாடி இருந்தார். இதே வீடியோவை சஞ்சீவ் மனைவி ப்ரீத்தியும் தனது யூடுயூப் பக்கத்தில் பதிவிட, பலரும் நீங்கள் கீர்த்தி சுரேஷ் உறவினரா என்று கமன்ட் செய்தனர். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ப்ரீத்தி இதுகுறித்து கூறுகையில், கீர்த்தி சுரேஷ் என்னுடைய பக்கத்துக்கு வீட்டில் தான் இருக்கிறாள். அவள் எனக்கு ஒரு குழந்தை மாதிரி தான் என்னுடைய குழந்தைகளும் சரியாக ஐந்தரை மணி ஆனால் கீர்த்தி சுரேஷ் தேடி விளையாடுவார்கள்.

வீடியோவில் 5 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=MDTOSzp0UYs&feature=emb_title

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாரின் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. `முள்ளும் மலரும்' படம்போல ரஜினி நடிக்கும் அண்ணண் - தங்கச்சி சென்ட்டிமென்ட் கதை இது. ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரஜினியின் மனைவியாக நயன்தாராவும், ரஜினியின் முறைப்பெண்களாக குஷ்புவும், மீனாவும் நடிக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full