விஜய் பாடலுக்கு நடமாடி பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த கீர்த்தி சுரேஷ் வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 22/6/2021

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கண்டது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

https://twitter.com/KeerthyOfficial/status/1407288757322059776

ஆனால், தற்போது 'தளபதி 65' படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது.இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஜூன் 21) நெல்சன் பிறந்தநாளில் வெளியானது. அதே போல இரண்டாம் போஸ்டர் விஜய் பிறந்தநாளான இன்று இரவு 12 மணிக்கு வெளியானது.

இன்று விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி பல்வேரு பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யின் யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு விஜய்யின் ட்ரேட் மார்க் ஸ்டெப்புகளை போட்டு நடனமாடி தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிதித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யுடன் இது வரை இரண்டு படங்களில் நடித்துள்ளார். முதலில் இவர் விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அதை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்க்கார் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார். அந்த படம் சுமாரான விமர்சனம் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full