தமிழில் பட வாய்ப்புகள் இல்லைன்னா என்ன.! பாலிவுட் சென்றார் கீர்த்தி சுரேஷ்.!

By Rajkumar · 2/3/2019

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று அனைவருடனும் நடித்து விட்டார். தற்போது இந்தி திரையுலகில் அறிமுகமாக இருக்கிறாராம்.

நடிகையர் திலகம் படம் இவருக்கு நல்ல ஒரு பெயரை ஏற்படுத்தி தந்தது. விஷுலுடம் சண்டக்கோழி, விஜயுடன் ‘சர்கார்’ என்று தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியானாலும், இரண்டு படத்திலும் அம்மணியை கலாய்த்து பல மீம்கள் வெளிவர படும் அடைந்தார் கீர்த்தி.

அதே போல சர்கார் படத்தில் தன்னை டம்மியாக்கி விட்டனர் என்று புலம்பி வந்தார் கீர்த்தி சுரேஷ். அதே போல சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்திற்கு முக்கியம்துவம் அளிக்கப்படாதது உண்மை தன என்று இயக்குனர் முருகதாஸும் தெரிவித்திருந்தார்.

இவருக்கு பின்னர் வந்த பல நடிகைகள் வரிசையாக படத்தில் நடித்து வருகின்றனர். ஆனால், இந்த நடிகையர் திலகத்திற்கு தான் எந்த பட வாய்ப்பும் வந்த பாடில்லை. தற்போது முருகதாஸ், ரஜினியை வைத்து ரஜினி 166 படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார் என்ற செய்தியும் வெளியானது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை இந்த நிலையில் தற்போது இந்தியில் பட வாய்ப்பை பிடிக்க முயற்சி செய்து வருகிறார் அம்மணி.

இதனிடையே கீர்த்தி சுரேஷ், தற்போது இந்தி படம் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இந்தப் படத்தை அஜித் 59 பட தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரிக்க உள்ளதாககூறப்படுகிறது. இந்த படத்தை ‘பதாய் ஹோ’படத்தை இயக்கிய இயக்குநர் அமித் ஷர்மா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full