அப்படி எல்லாம் நடிக்க முடியாது - ஏற்கனவே நடத்த நடிகரிடன் படத்தை நிராகத்த கீர்த்தி சுரேஷ்?

By subhashini · 17/2/2024

முத்தக் காட்சியில் நடிக்க சொன்னதால் பிரபல நடிகரின் படத்திற்கு கீர்த்தி சுரேஷ் நோ சொல்லியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த பைலட்ஸ் என்ற மலையாள மொழி படத்தின் மூலம் தான் குழந்தை நட்சத்திரமாக கீர்த்தி சுரேஷ் அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் திரைப்பயணம்:

மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்தப் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

ரகு தாத்தா படம்:

இப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை அடுத்து சமீபத்தில் இவருடைய நடிப்பில் சைரன் என்ற படம் வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் தான் சைரன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதை அடுத்து தமிழில் இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ரகு தாத்தா. இந்த படத்தை இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கி இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள்:

இவர் ஏற்கனவே எழுதி ஃபேமிலி மேன் என்ற வெப்சீரிசை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, இந்த விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் இந்தி தெரியாத காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதை அடுத்து இவர் ரிவால்வர் ரீடா, கன்னிவெடி போன்ற படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் தான் இவர் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.

கீர்த்தி நடிக்க மறுத்த காரணம்:

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகருடன் நடிக்கும் பட வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் தவிர்க்கும் தகவல் தான் தற்போது வெளியாகி வருகிறது. அதாவது, கீர்த்தி சுரேஷ் முத்தம் மற்றும் உடலுறவு சம்பந்தமான காட்சியில் நடிப்பதில்லை. இதனால் தெலுங்கில் டாப் நடிகராக இருக்கும் நிதினுடன் சேர்ந்து நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால், அந்த படத்தில் ஒரு முத்தக் காட்சியில் நடிக்க சொல்லி இருக்கிறார்கள். ஆனால், கீர்த்தி நடிக்க முடியாது என்ற அந்த வாய்ப்பை தவிர்த்து இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷ் இதுவரை நடித்துள்ள படங்களில் பெரிதாக கிளாமராகவும் உடலுறவு மற்றும் நெருக்கமான காட்சிகளும் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full