மஞ்சள் கயிறு தாலியை மாற்றாமல் இருக்க இது தான் காரணம் - கீர்த்தி சுரேஷ் கொடுத்த விளக்கம்

By subhashini · 4/1/2025

திருமணத்திற்கு பிறகும் மஞ்சள் கயிறு தாலி அணிந்து இருப்பதற்கான காரணம் பற்றி கீர்த்தி சுரேஷ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்தார். தற்போது இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் வெளியான ‘பேபி ஜான்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தமிழில் வெளியான ‘தெறி ‘படத்தின் ரீமேக் ஆகும். வருண் தவான் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை இயக்குனர் அட்லி தயாரித்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் குறித்த தகவல்:

பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி இருவரும் 15 வருடமாக காதலித்து வந்து இருந்தார்கள். தற்போது ஆண்டனி துபாயில் செட்டில் ஆகி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இதை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்து இருந்தார். கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் பிரம்மாண்டமாக கீர்த்தி சுரேஷின் உடைய திருமணம் நடைபெற்று இருந்தது.

கீர்த்தி சுரேஷ் திருமணம்:

இந்த திருமணம் இந்து,கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்று இருந்தது. மேலும், இந்த திருமணத்தில் விஜய், அட்லீ உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள். திருமணம் முடிந்த கையோடு இவர் பேபி ஜான் படத்தினுடைய ப்ரமோஷன் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக இவர் மாடர்ன் டிரஸ்சில் வந்தாலுமே கழுத்தில் மஞ்சள் நிற தாலியுடன் தான் வந்திருந்தார்.

கீர்த்தி சுரேஷ் பேட்டி:

இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் திருமணம் முடிந்து எந்தவித கொண்டாட்டத்திலும் ஈடுபடாமல் தன்னுடைய பட பிரமோஷனில் தான் கீர்த்தி சுரேஷ் பிஸியாக இருந்தார். இது பலருக்கும் ஆர்ச்சரியமாக இருந்தது. இந்நிலையில் பட ப்ரோமோசனுக்காக அளித்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ், திருமணம் முடிந்து மூன்று வாரங்களுக்கு மேல் ஆகியும் நான் மஞ்சள் கயிற்றை போட்டிருப்பது குறித்து சிலர் கேள்வி கேட்டிருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=IlNZJZbd-pI

தாலி பற்றி சொன்னது:

மஞ்சள் கயிற்றை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு கலட்டக்கூடாது என்று சொல்வார்கள். அதனால் தான் நான் அதை அணிந்திருக்கிறேன். ஜனவரி கடைசியில் நல்ல நாள் பார்த்து மஞ்சள் கயிற்றை மாற்றுவேன். நான் தாலியை புனிதமாகவும், சக்தி வாய்ந்ததாகவும் நினைக்கிறேன். அதை அணிவதில் எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full