கிண்டல் செய்த வடநாட்டு பத்திரிக்கையாளருக்கு கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதிலடி - வைரலாகும் வீடியோ
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது.
அதிலும் இவர் பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இறுதியாக இவர் நடித்த ரகு தத்தா படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
பேபி ஜான் படம்:
தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தை அட்லீ தான் தயாரிக்கிறார். வருண் தவான் ஹீரோவாக நடித்த இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. தமிழில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த தெறி படத்தினுடைய ரீமேக் தான் பேபி ஜான். இந்த படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
கீர்த்தி சுரேஷ் கோபப்பட காரணம்:
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக கீர்த்தி சுரேஷ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர் சந்திப்பில் கீர்த்தி சுரேஷை போட்டோ எடுக்க அழைத்திருந்தார்கள். அப்போது அவரை க்ரித்தி என்று அழைத்திருந்தார்கள். உடனே அவர், க்ரித்தி இல்லை கீர்த்தி சுரேஷ் என்று சொல்லி இருக்கிறார். பின் அங்கிருந்த சில போட்டோகிராபர்கள் அவரை, தோசா என்று அழைத்திருந்தார்கள். அதைக் கேட்டு ஷாக் ஆன கீர்த்தி ஷாக், கீர்த்தி தோசா கிடையாது. கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி சுரேஷ் காதல்:
எனக்கு தோசை பிடிக்கும் என்று அவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் சமீப காலமாக சோசியல் மீடியாவில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் குறித்த செய்திகள் பரவி வந்தது. ஆனால், அதைப்பற்றி கீர்த்தி சுரேஷ் எதையுமே வெளிப்படையாக பேசவில்லை. அதன் பின் இவர் ஆண்டனி தட்டில் என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆண்டனி கொச்சியை சேர்ந்தவர். தற்போது இவர் துபாயில் செட்டில் ஆகி இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் திருமணம்:
ஆண்டனி-கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் 15 வருட பழக்கம். சில வாரங்களுக்கு முன் தான் கீர்த்தி சுரேஷின் உடைய திருமணம் கோலாகலமாக கோவாவில் நடைபெற்றது. இந்த திருமணம் இந்து முறைப்படி நடைபெற்று இருந்தது. மேலும், இந்த திருமணத்தில் விஜய், அட்லீ உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள்.